ஜியோவை எதிர்கொள்ள சிறப்பு 4ஜி டேட்டா பேக் திட்டத்தை அறிவித்த ஏர்டெல்.!

Written By:

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை அறிவித்த நாள் முதல் ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்கள் பல்வேறு விதங்களில், புதுப்புது திட்டங்களையும், பழைய திட்டங்களை விலையைக் குறைப்பதுமாக இருக்கின்றன. தினமும் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வெள்ளிக் கிழமை சிறப்பிக்க ஏர்டெல் களத்தில் இறங்கியுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஏர்டெல்

பாரதி ஏர்டெல் நிறுவனம் சிறப்பு 4ஜி டேட்டா பேக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் அதாவது மூன்று மாதங்களுக்கு இருக்கும்.

விலை

புதிய 4ஜி டேட்டா பேக் கட்டணம் ரூ.1,495 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை பழைய பயனர்களுக்கும், புதிய பயனர்கள் தங்களது முதல் ரீசார்ஜ் ரூ.1,494 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பயன்பாடு

சிறப்பு 4ஜி டேட்டா பேக் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அளவு டேட்டா அதிவேகமாகவும், குறிப்பிட்ட அளவினை பயன்படுத்தியதும் டேட்டா வேகம் குறைக்கப்படும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அளவு

அதன் படி 30 ஜிபி டேட்டாவினை 90 நாட்களுக்குப் பயன்படுத்த முடியும். 30 ஜிபி அளவு 90 நாட்களுக்குள் பயன்படுத்திய பின் 4ஜி வேகம் 2ஜியாக குறைக்கப்பட்டு விடும்.

ஏர்டெல்

முன்பு அறிவிக்கப்பட்டதைப் போன்று ஏர்டெல் சிறப்பு 4ஜி டேட்டா பேக் திட்டத்திலும் பயனர்கள் 1 ஜிபி 4ஜி டேட்டாவினை ரூ.50க்கு பெற முடியும். இதோடு 90 நட்களுக்கு அன்-லிமிட்டெட் 2ஜி டேட்டாவும் வழங்கப்படுகின்றது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரிலையன்ஸ் ஜியோ

இதுவே ரிலையன்ஸ் ஜியோவில் ரூ.1,499 செலுத்தும் போது 20 ஜிபி மட்டுமே வழங்கப்படுகின்றது. இதற்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். இதனால் 1ஜிபி 4ஜி டேட்டாவிற்கு ரூ.75 வரை வசூலிக்கப்படுகின்றது.

தில்லி

தற்சமயம் தில்லியில் மட்டும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் விரைவில் மற்ற நகரங்களிலும் வழங்கப்படும் என ஏர்டெல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமும் ரிலையன்ஸ் ஜியோ போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Airtel Launched Special 4G Prepaid Data Pack to counter Reliance jio Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்