ரூ.4000 விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் ஏர்டெல்

Posted by:

ஸ்மார்ட்போன்களில் மிகவும் அத்தியாவசியமானதாக விளங்கும் 'இன்டர்நெட்' இந்தியாவில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது என்று கூறலாம். இதை உருதிப்படுத்தும் விதமாக இந்திய பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டம் அமைந்திருக்கின்றது. இன்டர்நெட் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் சிறப்பான கருவிகளை வெளியிட துவங்கியுள்ளனர்.

வேற மாறி தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள்..!

3ஜி ஸ்மார்ட்போன்கள் வெளியானது போன வாரம், இப்பொழுது வெளியாகும் பெரும்பாலான கருவிகளிலும் 4ஜி சேவை வழங்கப்படுகின்றது. அதிக பட்ஜெட் விலையில் துவங்கி பட்ஜெட் விலையிலும் 4ஜி ஸ்மார்ட்போன்கள் கிடைக்க துவங்கி இருக்கும் நிலையில் ஏர்டெல் நிறுவனம் மலிவு விலையில் 4ஜி கருவிகளை வெளியிட இருக்கின்றது. இது குறித்த விரிவான தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இந்தாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏர்டெல் நிறுவனம் 4ஜி ஸ்மார்ட்போன்களை ரூ.4000 விலையில் இந்தியாவில் வெளியிட இருக்கின்றது.

விலை குறைவாக இருப்பதால் தரமும் குறைவாக இருக்கும் என்று நினைக்காதீர்கள், இவை பிராணடெட் ஸ்ம்ராட்போன்களாக இருக்கும் என்றே கூறப்படுகின்றது.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்த திட்டம் குறித்து ஏர்டெல் நிறுவனம் சந்தையில் சிறந்து விளங்கும் பிரபல நிறுவனத்துடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டிருப்பதாக அந்நிறுவனத்துடன் நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏர்டெல் நிறுவனம் சீன விற்பனையாளர் மற்றும் தாய்வானை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

எனினும் பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை வழங்க ஏர்டெல் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் மறுத்து விட்டன.

இந்த கருவிகளில் நீண்ட நாட்களுக்கான டேட்டா வழங்கப்படுவதோடு அவை ஏர்டெல் மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

இந்த கருவிகளில் FDD மற்றும் TDD நெட்வர்க் சப்போர்ட் செய்யும் என்றும் இந்த கருவிகள் இந்தாண்டு தீபாளி சமயத்தில், அதாவது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் கொல்கத்தாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 4ஜி சேவையினை வழங்கியதோடு நாக்பூர், அவ்ரங்காபாத், பெங்களூரு, பூனே, சண்டிகர் மற்றும் பாட்டியாலா போன்ற இடங்களிலும் வழங்கி இருக்கின்றது.

இதோடு இல்லாமல் ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி சேவைக்கான சோதனைதள் சென்னை, மதுரை, கோயமுத்தூர், தில்லி, ஹைத்ராபாத், விசாகபட்டினம் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Bharti Airtel is planning to launch Airtel branded smartphones with 4G service for Rs 4,000 by October-November.
Please Wait while comments are loading...

Social Counting