நம்ம 4ஜி பொண்ணு சாஷாவின் புதிய அவதாரம்..!

Written By:

"மச்சான்.. அவளுக்கு வாய் வலிக்காதாடா 'தொன தொன தொன'னு விடாம பேசிட்டே இருக்கா...!" என்று கடுப்பாகி, ஏர்டல் 4ஜி விளம்பரம் ஓடும் சேனலை மாற்றும் சம்பவங்கள் நடக்கும் அதே சமயம் "டே..டே.. அந்த ஏர்டல் 4ஜி விளம்பரம் வைடா.." என்று சாஷாவிற்காகவே அந்த விளம்பரங்களை பார்க்கும் சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது..!

வடநாட்டு பெண்ணாக இருந்தாலும் கூட பார்த்து பழகிய பக்கத்து வீட்டு பெண் முகம் போலாகிவிட்ட நம்ம 4ஜி பொண்ணு சாஷா சேத்ரி, தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஏர்டல் :

புதிய அவதாரம் என்றதும் ஏர்டல் அல்லாத வேறு நிறுவன விளம்பரத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் என்று கற்பனைக்குதிரையை ஓட விடாதீர்கள்.

ஐசிசி டி 20 கோப்பை :

அதாவது நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி 20 போட்டிகளை ஐசிசி கோப்பையை குறிவைத்து போட்டிகள் நடைபெறும் காலகட்டம் வரையிலாக ஒளிபரப்பாகும் வண்ணம் 'பிராண்ட்டான' விளம்பர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது ஏர்டல் நிறுவனம், அதிலும் சாஷா சேத்ரி தான் கலக்குகிறார், ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்..!

அறிமுகம் :

வழக்கமான ஏர்டல் 4ஜி விளம்பரங்களில் சாஷா தான் 4ஜி-யை பற்றி பேசி அறிமுகம் செய்வார், இந்த முறை சற்று வித்தியாசமாக விளம்பரத்தில் இடம்பெறும் சக நடிகர்கள் சாஷாவிற்கு 4ஜி-யை அறிமுகம் செய்வது போல உருவாக்கப்பட்டுள்ளது.

சாஷா ரியாக்ஷன் :

நான் விடுமுறையில் இருக்கிறேன் "இங்கே 4ஜி கிடையாது" என்று சாஷா கூறுவது போன்றும், "இல்லை இங்கே 4ஜி உண்டு" என்று மலை பிரதேசங்களில் வாழும் மக்களில் ஒருவர் பதில் சொல்லும் போதும், என்கிட்டயே ஏர்டல் 4ஜி அறிமுகமா என்பது போல் சாஷா காட்டும் ரியாக்ஷன் தான் இப்புதிய வகை விளம்பரத்தில் 'ஹைலைட்'..!

விளம்பரங்கள் :

பெரும் நகரங்களை விட்டு மிகவும் ஒதுங்கி வாழும் மக்கள் கொண்ட பிரதேசங்களில் கூட ஏர்டல் 4ஜி மிகவும் சிறப்பாக செயல்படுவது போல விளம்பரங்கள் உருவாக்கப் பட்டுள்ளது என்பதும் குறிபிடத்தக்கது.

வெறுக்க கூடிய முகம் :

இந்திய டிவி விளம்பரங்களிலேயே மிகவும் வெறுக்க கூடிய முகம் என்ற ஒரு சர்வேயில், சாஷா சேத்ரிக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டது என்பதும் குறிபிடத்தக்கது.

பட்டம் :

சாஷா, மும்பையில் உள்ள சேவியர் இன்ஸ்ட்டியூட் ஆஃப் கம்யூனிக்கேஷன் னில் விளம்பரத்துறையில் பட்டம் பெற்றவர் ஆவார்.

ட்ரெய்னீங் காப்பிரைட்டர் :

ஏர்டெல் விளம்பரத்தில் அறிமுகம் ஆவதற்கு முன்பு ஒரு விளம்பர நிறுவனத்தில் ட்ரெய்னீங் காப்பிரைட்டர் ஆக பணிபுரிந்துள்ளார்.

விளம்பரத்துறை :

ஏர்டெல் 4ஜி விளம்பரம் மூலம் தான் இவர் விளம்பரத்துறைக்குள் நடிக்க நுழைந்தார், பின்பு தான் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமூடி :

ஏர்டெல் 4ஜி விளம்பரத்திகாகத்தான் சாஷா தனது நீளமான தலைமூடியை வெட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேராதூன் :

சாஷா, உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரமான தேராதூனில் இருந்து தற்போது மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

டிரைவர்லெஸ் கார் செய்து அசத்திய இந்தியர்.!!


ஆண்ட்ராய்டிற்கு ஏற்ற மொபைல் பிரவுஸர்கள் : டாப் 10 பட்டியல்.!!


ரஷ்யாவால் மட்டுமே இப்படியெல்லாம் 'பிளான்' பண்ண முடியும்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Airtel 4G girl to don a new avatar. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்