அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்செல்.!

ஏர்செல் நிறுவனத்தின் லேட்டஸ்ட் அன்லிமிடெட் காம்போ பேக்ஸ் விவரங்கள்.

Written By:

இந்தியாவின் எல்லா தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அவர்களின் கட்டண திட்டங்கள் குறைப்பதும், மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் ஆக்கிரமிப்பு சலுகைகளை அறிமுகம் செய்வதும் மிகவும் பொதுவான ஒரு விடயமாக மாறிவிட்டது, இன்னும் சொல்லப்போனால் தினம் ஒரு புதிய ஆபரை எதிர்பார்க்கும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் மாற்றப்பட்டு விட்டனர்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வெளிப்படையாக, ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகமும் மற்றும் அந்நிறுவனம் மக்கள் மீது ஏற்படுத்தியுள்ள ஆக்கிரமிப்பு விளைவை எதிர்கொள்வதற்கும் தான் இத்தகைய நடவடிக்கைகளுக்கு காரணம்.

நாளுக்கு நாள் கட்டண போர் வலுவானதாக வளர்ந்துகொண்டே போவதால், ஆப்ரேட்டர்கள் மத்தியில் ஒரு உக்கிரமான மனநிலை நிலவுகிறது. அப்படியான ஒரு நிலையின் வெளிப்பாட்டில் ஏர்செல் நிறுவனம் அதன் தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் ஆகிய இருவருக்குமே தரவு, குரல் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கவர்ச்சிகரமான மற்றும் சிறந்த மதிப்பிலான காம்போ பேக் ஆபர்களை (FRC297, FRC197 மற்றும் FRC127) அறிமுகம் செய்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

எப்ஆர்சி297 பேக்

இந்த பேக் ஆனது வரம்பற்ற ஏர்செல் டூ ஏர்செல் அழைப்புகளையும் (உள்ளூர் மற்றும் வெளியூர்), ஏர்செல் டூ பிற நெட்வர்க்குகள் உடனாக 108000 விநாடிகளுக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ், 2ஜிபி அளவிலான 3ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற 2ஜி டேட்டா ஆகியவைகளை வழங்குகிறது.

எப்ஆர்சி197 பேக்

இந்த பேக் ஆனது வரம்பற்ற ஏர்செல் டூ ஏர்செல் அழைப்புகளையும் (உள்ளூர் மற்றும் வெளியூர்), ஏர்செல் டூ பிற நெட்வர்க்குகள் உடனாக 54000 விநாடிகளுக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ், 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற 2ஜி டேட்டா ஆகியவைகளை வழங்குகிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எப்ஆர்சி127 பேக்

ஒரு சிறப்பான விலையில் அழைப்புகளுக்கான பேக் மற்றும் எப்போதும் ஆன்லைனில் தங்க விரும்பும் பயனாளிகளுக்கான சிறந்த பேக் இதுவாகத்தான் இருக்க முடியும். இந்த பேக் ஆனது வரம்பற்ற ஏர்செல் டூ ஏர்செல் அழைப்புகளையும் (உள்ளூர் மற்றும் வெளியூர்), ஏர்செல் டூ பிற நெட்வர்க்குகள் உடனாக 30000 விநாடிகளுக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ், 300எம்பி அளவிலான 3ஜி டேட்டா ஆகியவைகளை வழங்குகிறது.

28 நாட்கள் செல்லுபடியாகும்

மேற்குறிப்பிட்ட மூன்று காம்போ பேக்குகளுமே பரவலான ஸ்மார்ட்போன் பயன்பாடுகளை மனதில் கொண்டு உருவாக்கம் பெற்றுள்ளன என்பதும் இந்த அனைத்து பேக்குகளுமே 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கர்நாடகா பயனர்கள்

கர்நாடகாவில் உள்ள பயனர்கள் மட்டும் குரல் மற்றும் தரவு சலுகைகளின் கூறப்பட்டுள்ள பயன்களை விட மதிப்பு மிகுந்த பயன்களை பெறுவர்.

மேலும் படிக்க

காணாமல் போன ப்ரீடம் 251 நிறுவனமும், 2 லட்சம் ப்ரீ-ஆர்டர் கருவிகளும்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
Aircel Offers Unlimited Call and Data with its Latest Combo Packs. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்