சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன்களைத் தொடர்ந்து ஜெ5 கருவிகளும் வெடிக்கின்றன..

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ5 கருவி ஒன்று வெடித்திருப்பது அதன் பயனர்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.

Written By:

ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பயனர் ஒருவர் தனது கேலக்ஸி ஜெ5 கருவி வெடித்துச் சிதறியதாகத் தெரிவித்துள்ளார். முன்னதாகச் சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவிகள் வெடித்துச் சிதறியதால் அந்நிறுவனம் அவற்றைத் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட லம்யா போரிடேன், கருவியில் இருந்து புகை வருவதைப் பார்த்ததும் தனது குழந்தையிடம் கருவியைத் தூக்கி எறிந்திட சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

புகை

முதலில் கருவியில் இருந்து புகை வெளியாகி உடனே பின்புறம் வெடித்துச் சிதறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடித்த கருவியினை ஜூன் மாதம் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோட் 7 சோகம்

தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவிகள் அதிகளவு சூடாகி பின் வெடித்துச் சிதறியதால் சமீபத்தில் அவற்றைத் திரும்பப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

ஆய்வு

கேலக்ஸி ஜெ5 கருவிகளின் விற்பனை துவங்கி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த மாடல் வெடித்ததாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் சம்பவம் இது என ஐடிசி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

பேட்டரி

லித்தியம் அயன் பேட்டரிகளைப் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் வெடிக்காமல் இருக்கச் செய்யச் சில காலம் ஆகும், சிறிய வகைக் கோளாறும் கருவியை வெடிக்கச் செய்யும் எனக் கூறப்படுகிறது.

தகவல்

கேலக்ஸி ஜெ5 வெடித்த சம்பவம் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்படாத நிலையில் இது குறித்துக் கருத்து தெரிவிக்க இயலாது எனச் சாம்சங் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
After Note 7, Samsung Galaxy J5 catching fire
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்