ஸ்மார்ட்போனினை அதிக ஸ்மார்ட்'ஆக மாற்றுவது எப்படி??

By Meganathan
|

விலை உயர்ந்த கருவியில் இருக்கும் அம்சங்கள், பட்ஜெட் கருவியில் இருப்பதற்கான காரணங்கள் மிகவும் குறைவே. கொடுக்கும் விலைக்கு ஏற்ற அம்சங்கள் இருந்து கருவி நன்றாக வேலை செய்தாலே போதும் என்பதே இங்கு பெரும்பாலானோரின் எண்ணமாக இருக்கும்.

ஆனால் நீங்கள் அப்படி நினைக்க வேண்டாம். உங்களது பட்ஜெட் கருவியில் விலை உயர்ந்த கருவியில் இருக்கும் சில அம்சங்களை நீங்களாகவே பொருத்த முடியும். இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங்

உங்களது பட்ஜெட் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் பயன்படுத்த Qi எநும் சார்ஜிங் கருவியை பொருத்தினால் போதும். இதனை வாங்கும் முன் உங்களது கருவியில் இந்த அம்சம் வேலை செய்யுமா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

சத்தம்

சத்தம்

அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பாடல்களை அதிக சத்தத்தில் கேட்க முடிவதில்லை என்றே கூற வேண்டும். இந்த குறையை போக்க ஏம்ப்.மீ எனும் செயலி வழி செய்கின்றது. இந்த செயலி ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கும் கிடைக்கின்றது குறிப்பிடத்தக்கது.

ரிமோட் வியூஃபைன்டர்

ரிமோட் வியூஃபைன்டர்

இந்த செயலியை ஒரு ஸ்மார்ட்போனில் பொருத்தி மற்றொரு ஸ்மார்ட்போனுடன் இணைத்து புகைப்படங்களை எடுக்க முடியும். இந்த செயலியை கொண்டு ஒரு இடத்தில் இருந்தே மற்றொரு இடத்தினை படமாக்க முடியும்.

ஆட் ஆன் ப்ளாஷ்

ஆட் ஆன் ப்ளாஷ்

ஸ்மார்ட்போன்களில் எல்ஈடி ப்ளாஷ் இருப்பது நல்லது தான், ஆனால் செனான் ப்ளாஷ் அதிக திறன் கொண்டிருக்கின்றது. பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் செனான் ப்ளாஷ் பயன்படுத்தப்படுவதில்லை. அதனால் இந்த ப்ளாஷ் கருவியை பயன்படுத்தலாம். ஆனால் செனான் ப்ளாஷ் அதிக பேட்டரி எடுத்து கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல்

ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல்

உங்களது கருவியில் ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் ஆப்ஷன் இல்லை என கவலை வேண்டாம், வேவ் கன்ட்ரோல் எனும் செயலியை கொண்டு ஜெஸ்ட்யூர் அம்சத்தினை உங்களது கருவியில் பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
Add-ons to make your smartphone smarter.Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X