என்று தணியும் இந்த குழப்பம்? புதிய சிக்கலில் ஃப்ரீடம் 251.??

By Meganathan
|

உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போன் கருவியை ரூ.251க்கு வழங்குவதாக கடந்த மாதம் அறிவித்து அதிரடியான முன்பதிவுகளை செய்திருக்கும் புதிய ஸ்மார்ட்போன் நிறுவனமான ரிங்கிங் பெல்ஸ் துவக்கம் முதலே பல்வேறு சர்ச்சை மற்றும் பிரச்சனைகளில் சிக்கி தவிக்கின்றது.

என்று தணியும் இந்த குழப்பம்? புதிய சிக்கலில் ஃப்ரீடம் 251.??

சாத்தியமே இல்லாத விலையில் ஸ்மார்ட்போன் வழங்குவதை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களோடு அரசாங்கமும், முன்பதிவு செய்தோரும் குழப்பத்தில் தவித்து வரும் நிலையில் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்திற்கு மற்றும் ஓர் புதிய சிக்கல் வந்திருக்கின்றது.

ஆட்காம் நிறுவனம் கிளப்பியிருக்கும் புதிய குழப்பம் அனைவரையும் அதிர வைத்திருக்கின்றது. தங்கள் பிரச்சனழையை சட்டரீதியாக அனுகுவோம் என ஆட்காம் நிறுவனத்தின் நிறுவனர் சஞ்சீவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.

என்று தணியும் இந்த குழப்பம்? புதிய சிக்கலில் ஃப்ரீடம் 251.??

மேலும் 'ஃப்ரீடம் 251 கருவிகளின் அறிமுக விழாவில் ஃப்ரீடம் 251 கருவிகளோடு சில ஆட்காம் கருவிகளும் வழங்கப்பட்டிருப்பது எங்களை வருந்த வைத்திருக்கின்றது. இதன் மூலம் ஆட்காம் நிறுவனத்திற்கு அவ பெயர் அல்லது பிரான்ட் தரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் ரிங்கிங் பெல்ஸ் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்' என சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

என்று தணியும் இந்த குழப்பம்? புதிய சிக்கலில் ஃப்ரீடம் 251.??

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்திற்கு ஆட்காம் கருவிகள் விற்பனை செய்யப்பட்டது உண்மை தான், ஆனால் ரிங்கிங் பெல்ஸ் நிருவனம் அவைகளை மறு விற்பனை செய்ய இருப்பது எங்களுக்கு தெரியாது என்றும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார். இதோடு ரூ.3600க்கு விற்பனை செய்யப்பட்ட கருவிகளை அந்நிறுவனம் ரூ.251க்கு விற்பனை செய்வது குழப்பமாகவே இருக்கின்றது.

என்று தணியும் இந்த குழப்பம்? புதிய சிக்கலில் ஃப்ரீடம் 251.??

இந்த குழப்பத்திற்கு பதில் அளிக்கும் வகையில் அசோக் சத்தா தெரிவித்திருப்பதாவது : 'ஃப்ரீடம் 251 அறிமுக விழாவில் கலந்து கொண்ட விருந்தினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சில ஆட்காம் கருவிகள் வழங்கப்பட்டது உண்மை தான், ஃப்ரீடம் 251 எவ்வாறு இயங்கும் என்பதை வெளிப்படுத்தவே இந்த கருவிகள் வழங்கப்பட்டது. மேலும் எங்களது கருவிகளை தயாரிக்க சில நிறுவனங்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்நிறுவனங்கள் கேட்டு கொண்டால் அவைகளின் பெயர்களை வெளியிடுவதில் எங்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது' என அசோக் சத்தா தெரிவித்துள்ளார்.

எங்களது திடீர் உயர்வு குறித்து நாங்கள் ஏமாற்றி விடுவோம் என நினைக்க வேண்டாம். ஏற்கனேவே முன்பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கான பணம் திரும்ப வழங்கப்பட்டு விட்டது. இதன் பின் எடுக்கப்படும் முன்பதிவுகளுக்கும் கேஷ் ஆன் டெலிவரி முறையில் தான் பணம் வசூலிக்கப்பட இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

என்று தணியும் இந்த குழப்பம்? புதிய சிக்கலில் ஃப்ரீடம் 251.??

இடம் சார்ந்த பிரச்சனை காரணமாக நொய்டா அலுவலகம் கடந்த வியாழன் கிழமை திடீரென மூடப்பட்டது. இப்பிரச்சனை சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் மற்றும் நொய்டா அதிகாரியுடன் நடைபெற்றது. இனி எங்களது அலுவலகம் உத்திர பிரதேச்சில் பி-44, செக்டார் 63 என்ற முகவரியில் இயங்கும் என அசோக் சத்தா மேலும் தெரிவித்துள்ளார்.

ஜூன் 30 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யப்பட்டதில் சுமார் 25 லட்சம் ஃப்ரீடம் 251 கருவிகளை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய சிக்கலுக்கு ரிங்கிங் பெல்ஸ் பதில் அளித்திருந்தாலும் இந்த கருவி வாடிக்கையாளர் கையில் கிடைக்கும் வரை அனைவர் மனதிலும் குழப்பம் நிச்சயம் இருக்கதான் செய்யும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Adcom to sue Ringing Bells More trouble for Freedom 251 Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X