ஐபோன் 7 மொத்த விலை இது தான், ஆனால் நீங்கள் செலுத்துவது??

Written By:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டு சில நாடுகளில் இந்தக் கருவிகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது. வழக்கம் போல ஆப்பிள் நிறுவனம் விற்பனையில் கல்லா கட்டி வரும் நிலையில் ஐபோன் பிரியர்களை கலங்கச் செய்யும் தகவல் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

உண்மையில் ஐபோன் தயாரிக்க ஆகும் செலவு இவ்வளவு தான் என்ற தலைப்பில் இணையத்தில் வைரலாகி வரும் இத்தகவலில் ஐபோன் 7 கருவியைத் தயாரிக்க மொத்தமாக ஆகும் செலவு எவ்வளவு என்பதைப் பட்டியலிட்டுள்ளனர். ஐபோன் 7 கருவியில் இருக்கும் ஒவ்வொரு அம்சத்தின் விலை என முழுமையான பட்டியலை இங்குப் பாருங்கள்..

புகைப்படங்கள் : Teardown

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஐபோன் 7 திரை

ஐபோன் 7 கருவியின் திரை $37 அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,468.41 ஆகும்.

ஐபோன் 7 பேட்டரி

ஐபோன் 7 பேட்டரியின் விலை இந்திய மதிப்பில் ரூ. 266.85 ஆகும்.

டூயல் கேமரா

ஐபோன் 7 கருவியின் டூயல் கேமரா செட்டப் மொத்தமாக இந்திய மதிப்பில் ரூ.1,734.56 ஆகும்.

லாஜிக் போர்டு

ஐபோன் 7 கருவியின் லாஜிக் போர்டின் விலை இந்திய மதிப்பில் ரூ.4,936.82 ஆகும்.

ஸ்பீக்கர்

ஐபோன் 7 ஸ்பீக்கர் ரூ.767.21 மட்டுமே ஆகும்.

கேசிங்

ஐபோன் 7 முழுமையான கேஸிங் மதிப்பு ரூ.1,467.70 ஆகும்.

மற்ற பாகங்கள்

ஐபோன் 7 கருவியின் மற்ற பாகங்கள் ரூ.7,838.87 ஆகும்.

மொத்த மதிப்பு

முழுமையாகப் பார்க்கும் போது ஐபோன் 7 கருவியைத் தயாரிக்க ஒட்ட மொத்தமாக $292 அதாவது இந்திய மதிப்பில் ரூ.19,480.42 ஆகும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Actual Costs To Manufacture An iPhone 7 Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்