பப்ளிக் வைபையை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

பாதுகாப்புடன் வைபையை பயன்படுத்துவதால் சைபர் கிரிமினல்களிடம் இருந்து தப்பிக்கலாம். அவை என்னென்ன பாதுகாப்பு என்பதை தற்போது பார்ப்போம்

Written By:

வைபை என்பது தற்போது பெரும்பாலும் காசு கொடுத்தே பெற வேண்டிய நிலையில் உள்ளது. வெளிநாடுகளில் பல இலவச வைபைக்கள் வசதி உள்ளது. ஆனால் நம் நாட்டில் டிவி, கிரைண்டர் முதல் பல பொருட்கள் இலவசமாக கிடைத்தாலும் வைபை என்பது இன்னும் பெரும்பாலான இடங்களில் இலவசமாக வரவில்லை.

பப்ளிக் வைபையை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

ஆனால் அதே நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ புண்ணியத்தில் தற்போது இலவச வைபை வசதி ஒருசில இடங்களில் கிடைத்து வருகிறது.

புது ஸ்மார்ட்போன் வாங்க நேரம் வந்துடுச்சு : கண்டறிவது எப்படி.?

மேலும் பாரத பிரதமர் நரேந்திரமோடி டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருவதால், அதற்கு உதவியாக பி.எஸ்.என்.எல் நிறுவனமும் இலவச வைபைக்களை ஓருசில இடங்களில் வைத்துள்ளது.

மேலும் மகாராஷ்டிர அரசு மும்பையில் கிட்டத்தட்ட 500 இடங்களில் இலவச வைபை வசதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூகுளின் உதவியுடன் இந்தியாவில் உள்ள முக்கியமான ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி தற்போது உள்ளது.

6ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்.!

இந்நிலையில் இலவச வைபையை பயன்படுத்துவது என்பது ஆபத்தா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இலவச வைபை வசதியை பயன்படுத்து ஆபத்து இல்லை என்றாலும் ஒருசில பாதுகாப்புடன் வைபையை பயன்படுத்துவதால் சைபர் கிரிமினல்களிடம் இருந்து தப்பிக்கலாம். அவை என்னென்ன பாதுகாப்பு என்பதை தற்போது பார்ப்போம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

பாதுகாப்பான இணையதளங்கள் மற்றும் செயலியை மட்டும் பயன்படுத்துங்கள்

இலவச வைபையை பயன்படுத்தும்போது ஒரு இணையதளத்தை ஓப்பன் செய்வதற்கு முன்னர் அந்த இணையதளம் பாதுகாப்பான இணையதளம் தானா? என்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்து கொண்டு பின்னர் ஒப்பன் செய்யவும்.

ஏனெனில் சைபர் கிரிமினல்கள் பாதுகாப்பில்லாத இணையதளத்தின் மூலம் நம்முடைய ஸ்மார்ட்போனில் ஊடுருவி நமது டேட்டாகளை எளிதில் திருட அதிக வாய்ப்பு உள்ளது.பாதுகாப்பான இணையதளங்கள் தானா? என்பதை உறுதி செய்ய கூகுள் நிறுவனமே பச்சை நிறத்தில் ஒரு டிக் அடித்திருக்கும் என்பதை ஏற்கனவே நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

VPN பயன்படுத்துங்கள்:

ஒருவேளை உங்களால் எது பாதுகாப்பான இணையதளம், எது பாதுகாப்பற்ற இணையதளம் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் VPN பயன்படுத்துவது நல்லது.

VPN சர்வர் மூலம் நீங்கள் ஒரு இணையதளத்தை ஓப்பன் செய்தால் ஹேக்கர்களால் எளிதில் உங்கள் ஸ்மார்ட்போனில் ஊடுருவ முடியாது. எனவே உங்களது பெர்சனல் டேட்டாக்கள் பாதுகாக்கப்படும். VPN குறித்து மேலும் அறிய விரும்பினால் அதற்கு உங்களுக்கு ஏராளமான இணையதளங்கள் உதவி செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே

 

வைபையை பயன்படுத்தாதபோது ஆஃப் செய்து வைக்கவும்

பாதுகாப்பான, பாதுகாப்பற்ற இணையதளங்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவது போலவே, இலவச வைபையை பயன்படுத்தும்போது நீங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய ஒரு வழிமுறை என்னவெனில், இண்டர்நெட்டை பயன்படுத்தாதபோது வைபையை ஆஃப செய்து வைத்துவிடுங்கள்.

வைபையை ஆப் செய்துவிட்டால் உங்கள் ஸ்மார்ட்போனுக்குள் எந்த ஹேக்கர்களாலும் நுழைய முடியாது. பயன்படுத்தாத போதும் நீங்கள் வைபையை ஆன் செய்து வைத்திருந்தால் ஹேக்கர்கள் மிக எளிதில் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் போனுக்குள் நுழைந்து டேட்டாக்களை திருடும் வாய்ப்பு உள்ளது.

 

அப்டேட் செய்ய மறக்க வேண்டாம்

ஒவ்வொரு சாப்ட்வேர் நிறுவனங்களும் அவ்வப்போது அப்டேட்களை அறிவித்து கொண்டிருக்கும். சில நிறுவனங்கள் மாதம் ஒருமுறை அப்டேட் செய்யும். எனவே சாப்ட்வேர் நிறுவங்கள் அப்டேட்டை அறிவிக்கும் போது கண்டிப்பாக அப்டேட் செய்து விடுங்கள். தள்ளிபோடாமல் அப்டேட்களை செய்து கொண்டிருந்தால் உங்கள் ஸ்மார்ட்போனை ஹேக்கர்கள் நெருங்குவது என்பது மிகக்கடினமாக இருக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
The installment of public Wi-Fi hotspots which offer free internet to the masses has been growing quickly in the recent past. Here's how to stay safe...
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்