சத்ய நாடெல்லாவிற்கே 'அட்வைஸ் சொன்ன' 8 வயது சிறுவன்..!

Written By:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாடெல்லா அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர், தொழில் முனைவோர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகளை சந்தித்தார்.

சத்ய நாடெல்லாவின் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலைப்படுத்தும் பார்வையானது மும்பையை சேர்ந்த எட்டு வயது நிரம்பிய கேம் டெவலப்பர் ஆன மேதன்ஷ் மேத்தாவை (Medansh Mehta) சந்திக்க வைத்தது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

சத்ய நாடெல்லாவுடன் ஆன சந்திப்பின்போது மேதன்ஷ் மேத்தா தான் உருவாக்கிய 'லெட் தேர் பி லைட்' (Let There Be Light) என்ற கேம் ஆப்பை வழங்கினான்.

#2

அந்த கேம் - நாணயங்களை சேகரிப்பதின் மூலம் நகரங்களில் தொழிற்சாலைகள் மற்றும் பண்ணைகளை அமைக்க முடியும் அதன் மூலம் நகரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

#3

அதுமட்டுமின்றி தனது கேமின் விளக்கவுரையின் போது நீங்கள் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் விவசாய வளர்ச்சி ஆகிய இரண்டையும் சமநிலையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சத்ய நாடெல்லாவிடம் மேத்தா கூறியுள்ளான்.

#4

இந்த இரண்டு வளர்ச்சிகளையும் சமநிலை படுத்துவதின் மூலம் மாசு கட்டுபடுத்துதல், வளர்ச்சி நிலை, வளர்ச்சி விகிதம், பொருளாதார தக்கவைப்பு ஆகியவைகளை நிகழ்த்த முடியும் என்று சத்ய நாடெல்லாவிற்கே அட்வைஸ் செய்துள்ளான் மேத்தா..!

#5

அதற்கு சத்ய நாடெல்லா "இது மிகவும் சிக்கலான ஒரு விடயம், அதேசமயம் ஒரு நல்ல தீம். இது உலகில் உள்ள அனைவரும் விரும்பத்தக்க வண்ணம் உள்ளது என்று பதிலளித்துள்ளார்.

#6

அதனை தொடர்ந்து "என்னை போன்ற குழந்தைகளுக்கு உங்கள் அறிவுரை என்ன..? அவர்கள் அடுத்த மைக்ரோசாப்ட் சிஇஒ-வாக என்ன செய்ய வேண்டும்.? என்ற கேள்வியை எழுப்பினான்.

#7

இந்த தலைமுறை குழந்தைகள் நிச்சயமாக அடுத்த மைக்ரோசாப்ட் சிஇஒ-வாக ஆக முடியும். அதற்கு நிறைய கோடிங் கற்க வேண்டும் அதை விட முக்கியமாக மைக்ரோசாப்ட் சிஇஒ-வாக ஆக வேண்டும் என்ற நம்பிக்கை அதிகம் வேண்டும்" என்று விடையளித்தார்.

#8

பின்பு "உன்னால் மைக்ரோசாப்ட் சிஇஒ-வாக உருவாக முடியுமா என்று பத்திரிக்கை யாளர்கள் கேள்வி எழுப்பிய போது "நிச்சயமாக நான் முயற்சிப்பேன், ஏனெனில் முயற்சி செய்தால் உங்களால என்ன வேண்டுமாலும் செய்ய முடியும்" என்று எல்லோருக்குமே ஒரு பெரிய அட்வைஸ் ஒன்றை வழங்கினான்..!

#9

மைக்ரோசாப்ட் விண்டோஸ்க்கு மாற்றான 5 இலவச இயங்குதளங்கள்..!


மேக் இன் இந்தியா : 2017'இல் தயாராகும் இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர்.!!


இந்தியாவில் விலை குறைந்த லேப்டாப் அறிமுகம்.!!

#10

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
8-Year-Old Advises Satya Nadella On Pollution, Sustainable Economy And World Domination. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்