ஐபோனாலேயே முடியாத எட்டுக் காரியங்கள்..

பல்வேறு எதிர்பார்ப்புகளைத் தொடர்ந்து அறிமுகமான ஐபோன் 7 கருவி வழக்கம் போல உற்சாக வரவேற்பைப் பெற்று விற்பனையில் அசத்தி வருகின்றது. இந்நிலையில் இந்தக் கருவியாலேயே முடியாதவை சில இருக்கின்றன..

By Meganathan
|

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ஐபோன் 7 வழக்கம் போல அந்நிறுவனத்திற்கு லாபம் ஈட்டிக் கொண்டிருக்கின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் அமோக விற்பனையைப் புதிய ஐபோன் கருவிகள் சந்தித்து வருகின்றன.

ஐபோன் 7 விலையைக் கடந்து இதன் விற்பனை கல்லா கட்டி வரும் நிலையில் இந்தக் கருவியாலேயே முடியாதவை சில இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா?

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங்

சாம்சங், கூகுள், எல்ஜி, மோட்டோரோலா, மைக்ரோசாஃப்ட், பிளாக்பெரி கருவிகளிலும் வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது. ஆனால் புத்தம் புதிய ஐபோன் 7 கருவியில் இந்த அம்சம் வழங்கப்படவில்லை.

குவிக் சார்ஜிங்

குவிக் சார்ஜிங்

இன்று வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் குவிக் சார்ஜிங் அம்சம் வழங்கப்படுகிறது. 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 3 மணி நேர பேக்கப் வழங்கும் பல்வேறு கருவிகள் இன்று பட்ஜெட் விலையிலும் கிடைக்கின்றது.

ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே

ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே

கேலக்ஸி எஸ்7 மற்றும் எஸ்7 எட்ஜ் கருவிகளில் தேதி, நேரம் உள்ளிட்டவற்றைப் போனினை வேக்கப் செய்யாமல் பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இந்த ஆப்ஷன் ஐபோன் 7 கருவியில் இல்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டூயல் சிம் ஸ்லாட்

டூயல் சிம் ஸ்லாட்

ஒரே கருவியில் இரு சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் வழக்கம் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு நிறுவன கருவிகளிலும் கிடைக்கின்றது.

கஸ்டமைஸ்

கஸ்டமைஸ்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பல்வேறு விட்ஜெட் ஆப்ஷன் மூலம் திரையைக் கஸ்டமைஸ் செய்ய முடியும். ஐஓஎஸ் இயங்குதளத்தில் இது போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்படவில்லை.

மெமரி

மெமரி

கருவியில் வழங்கப்படும் இன்டர்னல் மெமரி இல்லாமல், கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதி வழக்கம் போலப் புதிய ஐபோன்களிலும் வழங்கப்படவில்லை, எனினும் கருவியின் இன்டர்னல் மெமரி அளவுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

பிரவுஸர்

பிரவுஸர்

ஐஓஎஸ் இயங்குதளங்களில் சஃபாரியைத் தவிர மற்ற பிரவுஸர்களைப் பயன்படுத்த முடியாது. க்ரோம் பயன்படுத்தும் போதும் சில லின்க்'களைக் கிளிக் செய்யும் போதும் சஃபாரியில் திறக்கும்.

3டி மேப்பிங்

3டி மேப்பிங்

இந்தாண்டு ஜூன் மாதம் வெளியான லெனோவோ ஃபேப் 2 ப்ரோ கருவியில் கூகுளின் பிராஜக்ட் டாங்கோ 3டி மேப்பிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருந்தது. பயனரின் அருகாமையில் இருக்கும் சுற்றுப்புறத்தை மேப் செய்ய இந்தத் தொழில்நுட்பம் வழி செய்து அதில் முப்பரிமாண எஃபெக்ட்களைப் பொருத்த வழி செய்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
8 things the iPhone 7 can't do

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X