இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 'நம்ம' சுந்தர் பிச்சையின் 8 முயற்சிகள்.!

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சையின் இந்திய சுற்றுப்பயணம் டெக்னாலஜி இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாயந்தது.

By Siva
|

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தார். இந்த சுற்றுப்பயணம் டெக்னாலஜி இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்பட்டது.

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 'நம்ம' சுந்தர் பிச்சையின் 8 முயற்சிகள்.!

இந்தியா டிஜிட்டலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதாகவும், விரைவில் முழுஅளவில் டிஜிட்டல் இந்தியாவாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஜியோ : 3 மாத இலவச 100எம்பிபிஎஸ் வேகம் கொண்ட பைபர் சேவை ஆரம்பம்.!

இந்தியாவை முழுமையாக டிஜிட்டலாக மாற்ற இந்திய அரசுடன் அவர் எட்டு விதங்களில் கைகோர்க்க உள்ளார். இந்திய அரசும், கூகுளும் இணைந்து மிக விரைவில் டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற உள்ளது. அந்த எட்டு விஷயங்கள் என்ன என்று பார்ப்போம்

எங்கும் எதிலும் டிஜிட்டல் மயம்:

எங்கும் எதிலும் டிஜிட்டல் மயம்:

கூகுளின் முயற்சியில் உருவாக இருக்கும் டிஜிட்டல் மயம் காரணமாக இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் செய்பார்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். சிறுதொழில் செய்பார்களுக்கு கூகுள் நிறுவனம் இலவசமாக டிஜிட்டல் பயிற்சி அளிக்கவுள்ளது.

இந்தியாவில் உள்ள சுமார் 40 முக்கிய நகரங்களில் 5000 இடங்களை தேர்வு செய்து அங்கு டிஜிட்டல் குறித்த விழிப்புணர்வை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஏற்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி 90 வீடியோக்கள் மூலம் ஆன்லைனிலும் டிரைனிங் நடைபெறவுள்ளது. இவை அனைத்தும் சிறு வியாபாரிகளை டிஜிட்டலுக்கு மாற செய்யும் நடவடிக்கை ஆகும்

கூகுள் பிரைமர் (Google Primer)

கூகுள் பிரைமர் (Google Primer)

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள ஒரு செயலி தான் கூகுள் பிரைமர். விரைவாகவும், எளிதாகவும் டிஜிட்டல் மார்க்கெட் செய்ய இந்த செயலி இந்தியர்களுக்கு உதவும். கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஐஒஎஸ் ஆப் ஸ்டோரில் இந்த செயலியை இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறலாம். முதல்கட்டமாக இந்த செயலி ஆங்கிலம் மற்றும் இந்தியில் உருவாக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் தமிழ் தெலுங்கு மற்றும் மராத்தியில் வெளிவரவுள்ளது.

கூகுளின் மை பிசினஸ் புரோகிராம்

கூகுளின் மை பிசினஸ் புரோகிராம்

ஒரு தொழிலை வளர்ச்சி அடைய செய்ய நிச்சயம் ஒரு இணையதளம் வேண்டும். ஆனால் சிறு வணிகம் செய்பவர்களுக்கு என்றே உருவாக்கப்பட்டதுதான் மை பிசினஸ் புரோகிராம். இணையதளத்திற்கோ, டொமைனுக்கோ எந்தவித முதலீடும் செய்யாமல் சிறு வணிகர்கள் இந்த வழியை பயன்படுத்தி தங்கள் வணிகத்தை அதிகரித்து கொள்ளலாம்.

இப்போதே சுமார் 8 மில்லியன் இந்தியாவின் சிறு வணிகள் இதில் இணைந்துள்ளனர். இன்னும் அதிகளவில் நாள் தோறும் இணைந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் மை பிசினஸ் இணையதளம்

கூகுள் மை பிசினஸ் இணையதளம்

மொபைலில் செயல்படும்படியான எளிதான இணையதளம்தான் இந்த மை பிசினஸ் வெப்சைட். ஜனவரி 4ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த மை பிசினஸ் இணையதளம் சிறு வணிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று கூறினால் அது மிகை ஆகாது.

இந்த இணையதளத்தின் மூலம் சிறு வணிகர்கள் தங்களுடைய தயாரிப்புகள், அதன் முக்கியத்துவம், கிடைக்கும் இடம் ஆகிய விபரங்களை பதிவு செய்வதோடு ,புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இணையதளம் ஆங்கிலம், இந்தி, பெங்காலி, தெலுங்கு, மராத்தி, தமிழ், உருது, குஜராத்தி, கன்னடம், மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் செயல்பட்டு வருகிறது.

இண்டர்நெட் சாத்தி இனிஷியேட்டிவ்:

இண்டர்நெட் சாத்தி இனிஷியேட்டிவ்:

கூகுள் நிறுவனம் டாடா நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் ஒரு அமைப்புதான் இது. இதன் மூலம் பெண்களுக்கு டிஜிட்டல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம்.

குறிப்பாக விவசாயம் குறித்த விஷயங்கள், பள்ளி கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துவது, டெலிபோன், மின்சார பில்கள் உள்பட பா பில்களை ஆன்லைனில் செலுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஆரம்பத்தில் 4500 கிராமங்களில் இந்த அமைப்பு செயல்பட உள்ளதாகவும், விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

கூகுள் இந்தி கீபோர்டு:

கூகுள் இந்தி கீபோர்டு:

கூகுள் தற்போது இந்தியாவின் முக்கிய மொழிகளை மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்த்து கொடுக்கும் சேவையை செய்து வருகிறது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு கீபோர்டு மூலம் சுமார் 11 இந்திய மொழிகளை மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழி பெயர்க்க வேண்டும் என்றால் அந்த மொழியில் வார்த்தைகளை காப்பி பேஸ்ட் செய்தால் நாம் விரும்பும் மொழிக்கு ஆண்ட்ராய்டில் முடியும்.

ஐதராபாத்தில் புதிய கிளை:

ஐதராபாத்தில் புதிய கிளை:

கூகுள் நிறுவனம் ஐதராபாத்தில் புதிய கிளை ஒன்றை அமைக்க ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதுமட்டுமின்றி பெங்களூர் மற்றும் ஐதராபாத்தில் உள்ள பொறியியல் நிறுவனங்களில் முதலீடு செய்யவும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இலவச வைஃபை

இலவச வைஃபை

கூகுள் நிறுவனம் ஏற்கனவே இந்திய ரயில்வேவுடன் இணைந்து இலவச வைஃபை சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த சேவையில் ஹை ஸ்பீடு வைஃபை வழங்க உள்ளது. இதற்காக 400 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மும்பை ரயில் நிலையம் இந்த வைபை வசதியை பெற்ற முதல் ரயில் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோக இந்தியாவில் கூகுள் நிறுவனம் பண பரிவர்த்தனை செய்யவும் ஆலோசித்து வருகிறது. இதுகுறித்த மகிழ்ச்சியான அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
India is a major market for Search Engine Giant Google and here's what the company has done for the Indian market under Sundar Pichai's leadership

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X