ஏரியா 51 : ஒட்டுமொத்த அமெரிக்க அரசும் மறைக்க விரும்பிய ஒரு இடம்..!

ஏரியா 51-க்குள் என்னத்தான் நடக்கிறது..? என்னதான் இருக்கிறது.?

By Staff
|

உலகிலுள்ள நுழைய தடை செய்யப்பட்ட இடங்களில் மிகவும் சுவாரசியமான மற்றும் புதிர்கள் நிறைந்த இடம் தான் அமெரிக்காவில் உள்ள நெவேடாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஏரியா 51..!

ஒரு குறிப்பிட்ட இடத்தை பற்றி பல விடயங்கள் மறைக்கப்படுகிறது என்றாலே அதன் மீது ஆர்வம் ஏற்படும் பட்சத்தில், ஏலியன்கள், பறக்கும் தட்டு சார்ந்த ஆய்வுக்கூடம், பூமிக்கு ஆய்வுக்கூடங்கள், அமெரிக்க அரசின் பெரும்பாலான ரகசிய ஆயுதங்களும் உளவு விமானங்களும் தயாரிக்கும் புழங்கும் இடம் அதிநவீன அறிவியல் மற்றும் தொழிற்நுட்பகூடங்கள் உள்ள இடம் என்றெல்லாம் செய்திகள் வெளியாக ஏரியா 51 பற்றி எண்ணிலடங்காத அளவிற்கு சதி ஆலோசனை கோட்பாடுகளே எழுந்தன என்பது தான் நிதர்சனம்.

<strong>கடந்த தசாப்தத்தின் 6 அளப்பரிய கண்டுபிடிப்புகள்! அறிவியல் அற்புதங்கள்..</strong>கடந்த தசாப்தத்தின் 6 அளப்பரிய கண்டுபிடிப்புகள்! அறிவியல் அற்புதங்கள்..

அப்படி ஏரியா 51-க்குள் என்னத்தான் நடக்கிறது..? என்னதான் இருக்கிறது.? - என்பது பற்றி இதுவரை கிடைத்த தெளிவான ஆதாரங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

01. நிஜம் :

01. நிஜம் :

ஏரியா 51 என்பது நிஜம் தான், பெரும்பலோனோர்கள் நம்புவது போல் கற்பனையான இடம் அல்ல.

உறுதி :

உறுதி :

2013-ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கமே ஏரியா 51 என்று ஒரு இடம் இருக்கிறது என்று வெளிப்படையாக உறுதி செய்தது.

 தகவல் பெறும் உரிமை :

தகவல் பெறும் உரிமை :

நீண்ட கால அமைதிக்கு பின் தகவல் பெறும் உரிமையின் அடிப்படையில், ஏரியா 51 பற்றிய இருப்பை அமெரிக்க அரசு ஒற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

02. தகவல்களும் கட்டுரைகளும் :

02. தகவல்களும் கட்டுரைகளும் :

ஏரியா 51 பற்றிய உறுதியான தகவல் வரும் முன்பே அதை பற்றிய தகவல்களும் கட்டுரைகளும் வெளியாகி கொண்டேத்தான் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது, அவைகள் தான் ஏரியா 51 மீதான ஆர்வத்தை கிளப்பி விட்டன எனலாம்.

03. மேப் :

03. மேப் :

அமெரிக்க அரசாங்கம் ஆனது ஏரியா 51 இருப்பு பற்றிய விவரத்தை மட்டுமின்று அது எங்கே இருக்கிறது என்ற மேப் ஒன்றையும் வெளியிட்டது.

பாதுகாப்பு :

பாதுகாப்பு :

அதன் மேப் மட்டும் தான் வெளியிடப்பட்டதே தவிர இன்றுவரை உள்ளே என்ன இருக்கும், எப்படி இருக்கும் என்பதெல்லாம் பலமான பாதுகாப்பின் கீழ் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

க்ரூம் ஏரி :

க்ரூம் ஏரி :

கிடைக்கப்பெற்ற மேப் மூலம் ஏரியா 51 என்பது எட்வர்ட்ஸ் விமான தளத்தின் ஒரு பகுதி என்றும், அந்த இடம் துல்லியமாக தெற்கு நெவேடாவின் உப்பு படுக்கை அருகில் உள்ள க்ரூம் ஏரியில் மீது அமைந்திருக்கிறது என்பதும் தெரியவருகிறது.

04. வளர்ச்சி மற்றும் பரிசோதனை :

04. வளர்ச்சி மற்றும் பரிசோதனை :

ஏரியா 51 ஆனது உளவு விமான வளர்ச்சி மற்றும் பரிசோதனை ஆகியவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது என்றும் பெரிதளவில் நம்பப்படுகிறது.

பறக்கும் தட்டு மற்றும் ஏலியன்கள் :

பறக்கும் தட்டு மற்றும் ஏலியன்கள் :

2013-ஆம் ஆண்டு அமெரிக்க அரசு, ஏரியா 51 ஆனது விமானங்கள் சார்ந்த பயன்பாட்டில் உள்ளது என்று கூறியதின் மூலம் அங்கு பறக்கும் தட்டு மற்றும் ஏலியன்கள் சார்ந்த சோதனை கூடம் ரகசியமாக இயங்குகிறது என்ற பொய்யான நம்பிக்கை தகர்க்கப்பட்டது.

யூ2 வகை விமானங்கள் :

யூ2 வகை விமானங்கள் :

குறிப்பாக, சோவியத் ஒன்றியத்துடன் பனிப்போரில் ஈடுப்பட்ட போது பயன்படுத்தப்பட்ட யூ2 வகை விமானங்கள் இங்கு தான் பரிசோதனை செய்யப்பட்டது என்று அமெரிக்க அரசு அம்பலப்படுத்தியது.

05. ஒபாமா

05. ஒபாமா

ஒருமுறை அமெரிக்க அதிபர் ஒபாமா "நான் தான் ஏரியா 51க்குள் பகிரங்கமாக சென்ற முதல் அதிபர் என்று நினைக்கிறேன்" என்று விளையாட்டாக சொல்லியதும் குறிப்பிடத்தக்கது.

தெரியாமல் இல்லை :

தெரியாமல் இல்லை :

ஒபாமவின் வாசகத்தை ஆதாரமாய் எடுத்துக்கொள்ள முடியாது என்ற போதிலும் கூட அவருக்கு ஏரியா 51 பற்றி எதுவும் தெரியாமல் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.

06. சுற்றுச்சூழல் சட்டம் :

06. சுற்றுச்சூழல் சட்டம் :

1995 ஆம் ஆண்டு ஏரியா 51 சுற்றி அபாயகரமான கழிவு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் சட்டம் ஒன்றிற்கு கையெழுத்திட்டார் என்பதும் அந்த சட்டம் ஏரியா 51 மீது அமெரிக்க அரசாங்கதிற்கு இருக்கும் முக்கியதுவத்தை வெளிப்படுத்தியது.

07. சுவையான உணவு :

07. சுவையான உணவு :

2010-ஆம் ஆண்டு ரகசிய தளமான ஏரியா 51-ல் பணிபுரிந்த மூத்த அதிகாரியான ஜேம்ஸ் நோஸ் அளித்த பேட்டி ஒன்றில் ஏரியா 51-இல் மிகவும்ம் சுவையான உணவு வழங்கப்படும் என்ற சுவாரசியமான தகவலை வெளியிட்டுந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
7 things we know for sure about Top Secret and Sensitive Area 51. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X