இண்டர்நெட்டில் ஆக்கபூர்வமாக எப்படி செயல்பட வேண்டும்? 7 முக்கிய ஆலோசனைகள்

By Super Admin
|

இண்டர்நெட் என்பது தற்போதைய உலகில் ஒவ்வொரு மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. மாணவர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவருக்கும் உதவும் இந்த இண்டர்நெட்டால் உலகமே நமது கைகளுக்குள் சுருங்கிவிட்டது.

இண்டர்நெட்டில் ஆக்கபூர்வமாக எப்படி செயல்பட வேண்டும்? 7 முக்கிய ஆலோசனைக

அலுவலக பணிகள், மெயில் பார்ப்பது, சமூக வலைத்தளங்களில் அரட்டை என நமது வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் இண்டர்நெட் கலந்துள்ளது.

உங்களுக்கு இதுவரை தெரிந்திராத 9 வகை சென்சாரை பற்றி பார்ப்போமா?

நமக்கு ஏராளமான விஷயங்களை சொல்லிக்கொடுக்கும் குருவாகவும் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த இண்டர்நெட்டை ஆக்கபூர்வமாக மட்டும் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போமா

 காலம் பொன் போன்றது. காலத்தை வீணாக்காதீர்கள்

காலம் பொன் போன்றது. காலத்தை வீணாக்காதீர்கள்

இண்டர்நெட்டில் உட்கார்ந்து விட்டால் நேரம் போனதே தெரியவில்லை என்று பலர் கூறுவதுண்டு ஆனால் இண்டர்நெட்டில் என்ன பார்த்தீர்கள் என்றால் அவர்களுக்கு சொல்ல தெரியாது. இதுமாதிரி எதையாவது பார்த்து உங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம். கம்ப்யூட்டர் முன் உட்காரும் முன்பே இண்டர்நெட்டில் என்னென்ன தேவைகள் என்பதை திட்டமிடுங்கள்

சமூக வலைத்தளங்களில் எப்படி செயல்பட வேண்டும்?

சமூக வலைத்தளங்களில் எப்படி செயல்பட வேண்டும்?

ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த நடிகர் பெரியவரா? அந்த நடிகர் பெரியவரா? போன்ற வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல், உங்களுடைய எண்ணங்களை அழுத்தமாக பதிவு செய்யுங்கள். ஃபேஸ்புக் குரூப்களை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தினால் ஏராளமான லைக்குகள் குவியும், நீங்களும் ஃபேஸ்புக் பிரபலம் ஆகிவிடுவீர்கள்

கல்விக்கு பயன்படுத்துங்கள்:

கல்விக்கு பயன்படுத்துங்கள்:

நீங்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்கும் பெரிய படிப்புகள் ஆன்லைனில் இலவசமாகவே கிடைக்கும். அப்படிப்பட்ட கோர்ஸ்களை தேர்வு செய்து உங்கள் அறிவை வளர்த்து கொள்ள இண்டர்நெட்டை தாராளமாக பயன்படுத்துங்கள். அது உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் பயனளிக்கும்.

மூளைக்கு வேலைகொடுக்கும் விளையாட்டை தேர்வு செய்யுங்கள்:

மூளைக்கு வேலைகொடுக்கும் விளையாட்டை தேர்வு செய்யுங்கள்:

இண்டர்நெட்டில் ஏராளமான கேம்ஸ்கள் குவிந்துள்ளன. கேம்ஸ்களை தேர்வு செய்யும்போதும் கவனம் தேவை. குறிப்பாக குழந்தைகள் மனதை வன்முறையை வளர்க்கும் கேம்ஸ்களை தேர்வு செய்வதை தவிர்த்து விடுங்கள். அறிவை வளர்க்கும் ஆயிரக்கணக்கான கேம்ஸ்கள் இண்டர்நெட்டில் கொட்டி கிடக்கின்றன. அவ்வாறான கேம்ஸ்களை நீங்களும் விளையாடி உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள்

பயனுள்ள சொற்பொழிவுகளை கேளுங்கள்

பயனுள்ள சொற்பொழிவுகளை கேளுங்கள்

இண்டர்நெட்டில் பல துறைகளில் வெற்றி பெற்றவர்களின் சொற்பொழிவுகள் குவிந்து கிடக்கின்றது. குறிப்பாக பங்குச்சந்தையில் வெற்றி பெற்ற பல வல்லுனர்கள் தங்கள் அனுபவத்தை ஆடியோ மூலம் பகிர்ந்துள்ளார்கள். இவ்வாறான ஆடியோவை கேட்டு அவர்களுடைய அனுபவத்தை நீங்களும் கிரகித்து கொண்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள். ஒரு ஆடியோ உங்கள் வாழ்க்கையையே மாற்றும் வகையிலும் இருக்கலாம்.

பிளாக்-இன் சிறப்பம்சங்கள்

பிளாக்-இன் சிறப்பம்சங்கள்

நீங்கள் ஒரு விஷயத்தை தேட சிலசமயம் பல இணையதளங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால் பிளாக்(Blog) எனப்படும் இணையதளங்கள், பல இணையதளங்களில் தொகுத்து வழங்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு தேவையான அனைத்து விபரங்களும் கிடைப்பதால் உங்கள் நேரம் மிச்சமாகும். பல பெரிய மனிதர்களின் பிளாக்குகளை தொடர்ந்து படியுங்கள்

டாக்குமெண்டரி படங்களை பாருங்கள்

டாக்குமெண்டரி படங்களை பாருங்கள்

உலகின் முன்னணி தலைவர்கள் குறித்த டாக்குமெண்டரி படங்கள் இண்டர்நெட்டில் குவிந்து கிடக்கின்றது. இந்த டாக்குமெண்டரி படங்களை பார்ப்பது பொழுதுபோக்கு மட்டுமின்றி உங்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். மேலும் நமது முன்னோர்களின் வாழ்க்கை வரலாற்றை விஷுவல் மூலம் தெரிந்து கொள்ள இதுவொரு நல்ல வாய்ப்பு

Best Mobiles in India

Read more about:
English summary
The internet can be used in a great way that is very effective and enriching by following a few things. Check out this content to know how you can use the internet in an intentional way.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X