ரூ.500, நோட்டுகள் முடக்கம் பலே பல்டியடித்த ஆன்லைன் வர்த்தகர்கள்.!

இந்தியாவில் பழைய ரூ.500, ரூ.1000/- நோட்டுகள் இனி செல்லாது என அறிவிக்கப்பட்டவுடனேயே ஆன்லைன் வர்த்தகர்கள் பலே பல்டியடித்துள்ளன.

By Meganathan
|

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் இந்தியாவில் செல்லாது என அறிவிக்கப்பட்டு விட்டது. மத்திய அரசின் தடாலடி அறிவிப்பு டிஜிட்டல் பணத்தின் பயன்பாட்டினை அதிகரித்திருக்கிறது.

இது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதைத் தொடர்ந்து புதிய அறிவிப்பு பலரையும் பாதிப்படையச் செய்திருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான ஆன்லைன் வர்த்தகம் கேஷ் ஆன் டெலிவரி அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அறிவிப்பிற்கு முன்பே முன்பதிவு செய்த பொருட்களைச் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளைக் கொண்டு எவ்வாறு வாங்குவது எனக் குழம்பி போயுள்ளனர்.

குறைப்பு

குறைப்பு

பிரச்சனையைக் கருத்தில் கொண்டு பல்வேறு இணைய வர்த்தக நிறுவனங்களும் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் பயன்பாட்டைக் குறைத்து விட்டன. ஓலா, ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற ஆப்களும் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன்களை வழங்குவதில்லை என அறிவித்துள்ளது.

அமேசான்

அமேசான்

அப்படியாக அமேசான் இணையத்தளத்தில் பயனர்கள் நன்மைக்காகக் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் நிறுத்தப்படுகிறது. பயனர்கள் இருப்பில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகளைத் தேவை அதிகம் இருப்பனவற்றிற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம், ரூபாய் நோட்டிற்குப் பதில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

இந்திய நிறுவனமான பிளிப்கார்ட் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் கிடையாது எனத் தெரிவித்து விட்டது. இந்தத் தகவல் ரூ.2000/- மற்றும் அதற்கும் அதிகமான பொருட்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. யுபெர் சேவையில் கேஷ் ஆன் டெலிவரி ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்பதால் கேஷ் ஆன் டெலிவரியின் போது எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்ற தகவல் வழங்கப்படுகிறது.

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

மற்றொரு இந்திய நிறுவனமான ஸ்னாப்டீல் இதே போன்ற அறிவிப்புகளை வழங்கி வருகிறது. கூடுதலாக ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்பதால் கேஷ் ஆன் டெலிவரியின் போது எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளது.

பேடிஎம்

பேடிஎம்

பேடிஎம் தளத்திலும் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் வழங்கப்படுவதில்லை. இதனால் பயனர்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தைச் செலுத்த வேண்டும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
500 Rs. Note Gone, online sites Disabling Cash on Delivery

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X