உஷாரய்யா உஷாரய்யா... ஆன்லைன் ஷாப்பிங் சலுகைகள் உஷாரு..!

ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு முன்பு நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான 5 விடயங்கள்.

Written By:

ஆன்லைன் ஷாப்பிங் என்றதும் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்கள் வழங்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை மட்டுமே நீங்கள் கருத்தில் கொள்ளக் கூடாது. நீங்கள் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன் ஒன்றை ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்கு முன்பு சில முக்யமான கவனமான விடயங்களை நீங்கள் செய்ய வேண்டியதுள்ளது.

அதுவும் கிட்டத்தட்ட அனைத்து ஆன்லைன் இ-காமர்ஸ் சில்லறை விற்பனையாளர்களும் உச்சகட்ட வியாபார நேரத்தில் இருக்கும் போது உங்கள் கவனம் இரட்டிப்பாக வேண்டும். எவ்வளவு கவனமாக இருப்பினும் சில ஆபத்துக்களை தவிர்க்க முடியாது தான். ஆக, ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டிய இடங்கள் என்னென்ன..?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வாரன்டி

நீங்கள் ஆன்லைனில் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் அதற்கு உத்தரவாதம் இருக்கிறதா என்பதை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும். இல்லை என்றால், ஒரு உத்தரவாதம் இல்லாத கருவியை நீங்கள் வாங்க நேரிடும்.

ரிட்டர்ன் பாலிசி

ஒரு வலைத்தளத்தில் இருந்து ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும்போது அங்கு ரிட்டர்ன் பாலிசி இல்லையென்றால் எக்காரணத்தை கொண்டு அங்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்ய வேண்டாம். இந்த வழக்கில் வாங்கிய தயாரிப்பை நீங்கள் பின்னர் திரும்ப அனுப்ப வேண்டும் அல்லது பொருளை மாற்ற வேண்டும் அது முடியாமல் போகும். ஆக, ரிட்டர்ன் பாலிசி மிக அவசியம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

100% கொள்முதல் பாதுகாப்பு

ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்கள் வாங்கும் போது 100% கொள்முதல் பாதுகாப்பு கொண்டுள்ள ஸ்மார்ட்போன்களை நீங்கள் வாங்க பரிந்துரைக்கப் படுகிறீர்கள். நீங்கள் செலவு செய்யும் பெரிய அளவிலான தொகைக்கு ஏற்ற எந்த பிரச்சினைகள் அல்லது சேதமும் இல்லாத கருவியை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஆஃபர் அல்லது தள்ளுபடிகள்

நீங்கள் ஒரு ஆன்லைன் வலைதளத்தில் ஸ்மார்ட்போன் வாங்கும்முன், பிற வலைத்தளங்களில் அதே சாதனம் சார்ந்த அனைத்து சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை ஒருமுறை சோதித்து பார்த்துவிட வேண்டும். பிற வலைத்தளங்களில் குறைவான விலையில் அதே சாதனம் கிடைக்கும் சாத்தியமும் உள்ளது.

ஸ்பெஷல் ஆபர் செக்ஷன்

நீங்கள் ஆன்லைனில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறீர்கள் என்றால் ஸ்மார்ட்போன் தேடல் நிகழ்த்தும்போது உடன் அதுசார்ந்த சிறப்பு சலுகைகள் பிரிவு ஏதேனும் உள்ளதா என்பதையும் சேர்த்தே ஒருமுறை தேடி பார்த்து விடவும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
5 Things To Keep in Mind Before an Online Smartphone Purchase This Diwali. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்