'இதெல்லாம்' இந்தியாவில் 2017-ஆம் ஆண்டிலாவது நிகழுமா.!?

2017ஆம் ஆண்டில் இந்தியாவின் டெக்னாலஜி வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

By Siva
|

சமீபத்தில் முடிந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவின் டெக்னாலஜி ஆண்டு என்றே சொல்லலாம். உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பின் காரணமாக பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்று முதல்முதலில் யோசிக்க வைத்த ஆண்டு இதுதான்.

மேலும் 4ஜி இண்டர்நெட் உள்பட புதுப்புத் டெக்னால்ஜிகளை அறிமுகம் செய்தது இந்த 2016ஆம் ஆண்டுதான்

2017 CES -இல் அனைவரையும் கவர்ந்த அற்புதமான தயாரிப்புகள். ஒரு பார்வை

இந்நிலையில் 2017ஆம் ஆண்டில் இந்தியாவின் டெக்னாலஜி வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்

டிரோன்கள்:

டிரோன்கள்:

ஒருசில நாடுகள் டிரோன்களை ஒருசில சட்ட விதிகளுடன் அனுமதித்துள்ளன. சில நாடுகளில் இதற்கென இன்னும் சட்டம் கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவை பொருத்தவரையில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் டிரோன்கள் பறக்க விடுவது சட்டவிரோதம் என்றே கூறப்படுகிறது.

ஒருவர் டிரோன்களை பறக்க விட வேண்டும் என்றால் அவர் கண்டிப்பாக DGCE என்ற அமைப்பிடம் கண்டிப்பாக அனுமதி வாங்க வேண்டும். இந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்த முறை மாற வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்,.

ஒருசில நிறுவனங்கள் தங்களுடைய தொழில் வளர்ச்சிக்காக டிரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி கேட்டுள்ளன. அமெரிக்காவை போல ஒருசில சட்டதிட்ட கட்டுப்பாட்டுடன் டிரோன்களை அனுமதிக்க இந்த ஆண்டு அரசு அனுமதி வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஹ்மெண்டட் ரியாலிட்டி மற்றும் விர்ட்டியுவல் ரியாலிட்டி (Augmented Reality and Virtual Reality)

ஆஹ்மெண்டட் ரியாலிட்டி மற்றும் விர்ட்டியுவல் ரியாலிட்டி (Augmented Reality and Virtual Reality)

VR என்று கூறப்படும் விர்ட்டியுவல் ரியாலிட்டி என்பது நாம் கம்ப்யூட்ட்ரில் பார்க்கும் ஒரு காட்சியை அந்த காட்சி இருக்கும் சுற்றுச்சூழலில் இருந்து பார்க்கும்படி ஏற்படும் உணர்வை அளிக்கும் ஒரு சாதனம். உதாரணமாக நாம் குற்றால அருவியை VR மூலம் பார்த்தால் நாம் குற்றாலத்திலேயே இருக்கும் வகையில் உணர்வை உண்டாக்குவது.

இந்த சாதனம் கடந்த ஆண்டிலேயே அறிமுகமாகி மக்கள் மத்தியில் பரவி வரும் நிலையில் இந்த ஆண்டு இதன் வளர்ச்சி வீடுகள், அலுவலகம் உள்பட பல இடங்களில் விரிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்ப் டிரைவிங் கார்கள்:

செல்ப் டிரைவிங் கார்கள்:

தற்போதைய காலத்தில் கார்கள் கூட எளிதில் வாங்கிவிடலாம். ஆனால் அதற்கு ஒரு நல்ல டிரைவர் கிடைப்பது பெரிய விஷயமாக உள்ளது. இந்நிலையில்தான் செல்ப் டிரைவிங் கார்கள் தற்போது அறிமுகமாகி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள சாலை வசதிகளில் இந்த கார்கள் எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை

2017ஆம் ஆண்டிலேயே செல்ப் டிரைவிங் கார்கள் இந்தியாவில் வந்துவிடும் என்று நினைக்க முடியாது. இருப்பினும் புதுடெல்லியில் விமான நிலையம் முதல் ஒருசில முக்கிய பகுதிகளுக்கு வர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

ரோபோக்கள்:

ரோபோக்கள்:

ரோபோக்களை இதுவரை நாம் சினிமாவில் மட்டுமே பார்த்துள்ளோம். ஆனால் விரைவில் இந்தியாவில் ரோபோக்களின் நடமாட்டம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்ட 'பிராபோ' என்ற ரோபோ இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் 3 லட்சம் முதல் 6 லட்சம் வரையில் டாடா மோட்டார் நிறுவனம் ரோபோக்களை தயாரிக்க உள்ளது. தொழிற்சாலைகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ள இந்ட்த ரோபோக்கள் இந்த 2017ஆம் ஆண்டில் அதிகம் வரவழைக்கப்படும் என தெரிகிறது. மேலும் வீட்டு உபயோகம் முதல் பல வேலைகளுக்கும் இந்தியாவில் ரோபோக்களை பயன்படுத்தும் காலம் வெகுதூரத்தில் இல்லை

வேகமான 4G இண்டர்நெட்:

வேகமான 4G இண்டர்நெட்:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்தியாவில் பெரும்பாலான பொதுமக்கள் 2G இண்டர்நெட் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ புண்ணியத்தில் 4G இண்டர்நெட்டை பலர் அனுபவிக்க தொடங்கிவிட்டனர். 2017ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட அனனத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களூம் 4G சேவையை வழங்க ஆரம்பித்துவிடும் என்பதால் விரைவில் 4G இந்தியாவை காணலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
This year we want to see faster 4G internet, drones self-driving cars, virtual and augment reality in full swing in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X