ஜியோ 4ஜி சிம் : கிட்டதட்ட போலியான மழுப்பல் சலுகைகள்..!? எது உண்மை..!?

|

ரிலையன்ஸ் ஜியோவின் மிக மலிவான கட்டண திட்டங்கள் மற்றும் அதிரடியான இலவசங்களால் நம் ஒவ்வொருவருக்கும் ஜியோ சிம் ஒன்று தேவை என்ற மனநிலையே உருவாகி விட்டது என்று கூறலாம். ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்ட் ஒன்றை பெற இன்றும் மக்கள் ஒரு நீண்ட வரிசையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் எக்ஸ்பிரஸ் மினி கடைகளின் வெளியே நிற்கிறார்கள்.

<strong>" title=""வேலை வேண்டும்" - தன்னை தானே 'ப்ளிப்கார்ட்டில்' விற்கும் ஐஐடி பட்டதாரி..! " loading="lazy" width="100" height="56" />"வேலை வேண்டும்" - தன்னை தானே 'ப்ளிப்கார்ட்டில்' விற்கும் ஐஐடி பட்டதாரி..!

இதற்கிடையே ஜியோ சிம் மீது ஆசை கொண்ட அனைவரும் சில முக்கியமான விதிகள் மற்றும் நிபந்தனைகளை புரிந்துக்கொள்ள தவறுகின்றன. அனைவரும் ரிலையன்ஸ் ஜியோ இலவச குரல் அழைப்புகள் மற்றும் வரம்பற்ற 4ஜி தரவு மற்றும் ஜியோ ஆப்ஸ்களை வழங்குகிறது என்று நம்புகிறோம். அப்படியாக, நீங்கள் உண்மையில் ஒரு ஜியோ சிம் கார்ட்டை பெற விரும்புகிறீர்கள் என்றால், அதற்கு முன்பு அறிந்து கொள்ள வேண்டிய ரிலையன்ஸ் சிம் வெல்கம் ஆஃபர் தொடர்பான சில கட்டுக்கதைகளை தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

கட்டுக்கதை #01

கட்டுக்கதை #01

வரம்பற்ற எஸ்எம்எஸ்..!

குறிப்பிட்ட எண்ணிக்கை :

குறிப்பிட்ட எண்ணிக்கை :

ரிலையன்ஸ் ஜியோ அதன் நெட்வெர்க் உடனான எஸ்எம்எஸ் இலவசமாக இருக்கும் அறிவித்த போதிலும், விரிவான கட்டண திட்டங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் எஸ்எம்எஸ்களை அனுப்ப முடியும் என்ற வரம்பை தெளிவாக கூறியுள்ளது

28 நாட்களுக்கு :

28 நாட்களுக்கு :

ரூ.19/- மற்றும் ரூ.149/- ஆகிய இரண்டு திட்டங்களுக்கு இடையே உள்ள கட்டண திட்டங்களில் சந்தாதாரர்கள் முழுவதுமாக வெறும் 100 எஸ்எம்எஸ்களை மட்டுமே அனுப்ப முடியும். அதாவது, 28 நாட்களுக்கு என்று அர்த்தம்.

பயனர்கள் மட்டுமே :

பயனர்கள் மட்டுமே :

ரூ.299/- மற்றும் அதற்கு மேற்பட்ட கட்டண திட்டங்களை தேர்ந்தெடுக்கும் பயனர்கள் மட்டுமே நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள் வரை அனுப்ப முடியும்.

கட்டுக்கதை #02

கட்டுக்கதை #02

வரம்பற்ற இரவு தரவு..!

நல்ல சலுகைதான் ஆனால் :

நல்ல சலுகைதான் ஆனால் :

வரம்பற்ற இரவு தரவு என்பதும், ஒரு ஜியோ கட்டுக்கதை தான். கட்டண திட்டங்களில் வரம்பற்ற இரவு தரவு கிடைக்கும் என்பது உண்மையிலேயே ஒரு நல்ல சலுகைதான் ஆனால் அந்த தரவு வழங்கப்படும் நேரத்தை சற்று கவனிக்க வேண்டும்.

மூன்று மணி நேரம் :

மூன்று மணி நேரம் :

வரம்பற்ற இரவு தரவு பயன்பாடு ஆனது நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை என்ற நேரக்கேடு கொண்டுள்ளது. அது மட்டுமின்றி நாள் ஒன்றிற்கு மூன்று மணி நேரம் மற்றும் மிகவும் நாள் அதிகாலை நேரத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுக்கதை #03

கட்டுக்கதை #03

வரம்பற்ற தரவு திட்டங்கள்..!

ஒவ்வொரு கட்டண திட்டத்தின் கீழும் :

ஒவ்வொரு கட்டண திட்டத்தின் கீழும் :

இது அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ஒவ்வொரு கட்டண திட்டத்தின் கீழும் வரம்பற்ற 4ஜி தரவு திட்டம் கிடைக்கும் என்று பலர் நம்புகின்றன.

128 கிலோபிட்கள் :

128 கிலோபிட்கள் :

நாள் ஒன்றிற்கு 4 ஜிபி தரவு பயன்பாடு வரை மட்டுமே வேகமான இணைப்பு பெற முடியம், நீங்கள் அந்த வரம்பை கடந்து விட்டால் தரவு வேகமானது 128 கிலோபிட்கள் என்ற அளவில் குறையும்.

கட்டுக்கதை #04

கட்டுக்கதை #04

ஜியோ ஆப்ஸ்கள் முற்றிலும் இலவசம்..!

வரம்பற்ற அணுகல் :

வரம்பற்ற அணுகல் :

ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோமாக்ஸ், ஜியோ நியூஸ்பேப்பர், ஜியோக்ளவுட், ஜியோ செக் யூரிட்டி உட்பட தங்கள் பயனர்கள் அதன் ஆப்ஸ் மற்றும் அதன் சேவைகளின் வரம்பற்ற அணுகலை அனுபவிக்க முடியும் என்று கூறியது.

கணக்கிடப்படும் :

கணக்கிடப்படும் :

டிசம்பர் 31 வரை இந்த பயன்பாடுகள் ஒரு இலவச சந்தாவில் வழங்கப்படுகிறது எனினும் உண்மையில் இந்த பயன்பாடுகள் அனைத்தும் உங்கள் தரவு பயன்பட்டு கணக்கிடப்படும் மற்றும் அதிக டேட்டா செலவழிக்கும்

கட்டுக்கதை #05

கட்டுக்கதை #05

ரூ.50/-க்கு ஒரு ஜிபி..!

ஜியோநெட் :

ஜியோநெட் :

ரூ.50-ல் 1 ஜிபி அளவிலான 4ஜி தரவை ஜியோ வழங்குகிறது என்ற நம்பிக்கை உண்டு ஆனால் அது ஒரு செல்லுலார் தரவு அல்ல ஒரு ஜியோநெட் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

செல்லுலார் தரவு :

செல்லுலார் தரவு :

4ஜி சேவைகள் சேர்த்து, பொது ஹாட்ஸ்பாட்களை பயன்படுத்தும் சேவை தான் ஜியோநெட். ஒவ்வொரு திட்டத்திலும் நீங்கள் செல்லுலார் தரவு மற்றும் ஜியோநெட் இணைப்பு முறையில் பெறப்படும் தரவை பயன்படுத்த முடியும்.

வரம்பை மீறும் போது :

வரம்பை மீறும் போது :

அப்படியாக நீங்கள் ஜியோநெட் பயன்பாட்டு வரம்பை மீறும் போதுதான் உங்களுக்கு ரூ.50/-ல் 1 ஜிபி தரவு கிடைக்குமீ தவிர செல்லுலார் தரவில் அல்ல.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

புதிய ஏர்டெல் 4ஜி சிம் வாங்குவதற்கு முன்பு நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவைகள்..!

Best Mobiles in India

English summary
ஜியோ சிம் வாங்குவதற்கு முன்பு தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 கட்டுக்கதைகள்..!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X