டாப் 5 வாட்ஸ்ஆப் மோசடிகள் : சிக்கி கொள்ளாதீர்கள்..!

நாளுக்கு நாள் வாட்ஸ்ஆப் பாதுகாப்பற்ற ஒன்றாக மாறிக்கொண்டே போகிறது. அப்படியாக உங்களால் நம்ப முடியாத சில வாட்ஸ்ஆப் மோசடிகள் இதோ.!

|

எந்த சமூக ஊடக அரங்காக இருப்பினும், அது பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் , இன்ஸ்டாகிராம் அல்லது வேறு எதுவாக இருப்பினும் அனைத்திலும் நல்லது - கெட்டது, சாதகம் - பாதகம் என இரண்டுமே இருக்கும்.

எடுத்துக்காட்டுக்கு வாட்ஸ்ஆப் ஆனது உங்ககளின் சிறந்த பயன்பாடாக இருக்கலாம் ஆனால் அதிலும் சில சமயம் 'பொறி'கள் வைக்கப் படுகின்றனர். எனவே, நீங்கள் என்ன நடக்கிறது என்பதில் கவனமாக, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே சமூக ஊடக அரங்கில் இதன் மோசடி செய்திகளும் சேர்த்தே வெளியாகத் தொடங்கியது.

அவைகள் இருபக்கமிருக்க நீங்கள் ஒரு ஆக்டிவ் ஆன வாட்ஸ்ஆப் பயனர் என்றால், நீங்கள் கண்டிப்பாக கீழ்வரும் 5 மோசடிகளை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

மோசடி #01

மோசடி #01

நீங்கள் அடிக்கடி வாட்ஸ்ஆப்பில் "இந்த வவுச்சரை பயன்படுத்தி ரூ.100 பெறுங்கள்" என்ற மெஸேஜை காண முடியும். இது போன்ற மெஸேஜ்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் அதை கிளிக் செய்ய கேட்கப்படும் பின்னர் உங்கள் தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும் என்றும் கேட்கும். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் இணைப்பை கிளிக் செய்யாதீர்கள்.

மோசடி #02

மோசடி #02

"வாட்ஸ்ஆப் முடிவுக்கு வருகிறது" என்ற மெஸேஜ் பல ஆண்டுகளாக சமூக ஊடக அரங்கு முழுவதும் உலா வரும் ஒரு மோசடி செய்தியாகும். இது சார்ந்த விடயத்தில் வாட்ஸ்ஆப் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் இதுவரை அறிவிக்கவில்லை.

மோசடி #03

மோசடி #03

சமீபத்தில், மோசடிக்காரர்கள் குறிப்பாக அவர்களின் வாட்ஸ்ஆப் கோல்ட் பதிப்பை வெளியிட்டு அதை மேம்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். அந்த செய்தியுடன் ஒரு இணைப்பும் வழங்கப்படும் அதன் மூலம் அவர்கள் அனைத்து வகையான வாட்ஸ்ஆப் அம்சங்களையும் அனுபவிக்க முடியும் என்று அவர்கள் உறுதிமொழி அளித்தனர். பின்னர் சமூக நெட்வொர்க்குகள் வழியாக அதுவொரு மோசடி என்று கண்டறியப்பட்டது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மோசடி #04

மோசடி #04

சில ஆப்ஸ்கள் நீங்கள் உங்கள் வாட்ஸ்ஆப் நண்பரை உளவு பார்க்க அனுமதிக்கும் என்ற வாக்குறுதியை அளிக்கும். ஆனால் அவைகள் எல்லாமே தீம்பொருள் தான், உங்கள் ஸ்மார்ட்போனை வைரஸ் கொண்டு பாதிக்குமே தவிர எந்த விதமான உத்தியோகபூர்வமான உளவு பயன்பாட்டையும் அது அளிக்காது.

மோசடி #05

மோசடி #05

உங்கள் தொலைபேசியானது வாட்ஸ்ஆப்பின் அல்ட்ரா லைட் வைஃபைக்கு ஆதரவு அளிக்கிறது இதன் மூலம் நீங்கள் உங்கள் தரவு செலவை குறைக்கலாம் முற்றிலுமாக இலவசமாக வாட்ஸ்ஆப் பயன்படுத்தலாம் என்ற செய்தி உங்களுக்கு கிடைத்தால் அது 100% போலியான மோசடியாகும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஆன்லைன் ஷாப்பிங், உங்க பணம் இப்படியெல்லாம் திருடப்படுவது உங்களுக்குத் தெரியுமா??

Best Mobiles in India

Read more about:
English summary
5 Scams That Every WhatsApp User Should Be Aware Of. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X