ஐபோனை விட ஆண்ட்ராய்டு பயனர்கள் தான் 'கெத்து'.. ஏன் தெரியுமா.?

ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன்.? எது பயனர்களுக்கு அதிக திருப்தி அளிக்கிறது.? உங்கள் ஆதரவு எந்த கருவிக்கு.? நிச்சயம் ஆண்ட்ராய்டு தான் என்றால் - "மகிழ்ச்சி"

|

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் - இந்த இரண்டு கருவிகளுமே ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் கருவிகளாகும். இந்த இரண்டில் எது சிறந்தது என்ற ஒரு நிலையான விவாதம் ஆரம்ப காலத்தில் இருந்தே நடந்துகொண்டு தான் இருக்கிறது.

நீங்கள் கூட இது தொடர்பாக இணையத்தில்ஆண்ட்ராய்டு vs ஐபோன் என பல ஒப்பீடு கட்டுரைகளை காணலாம். சுவாரஸ்யமாக, அதுபோன்ற கட்டுரைகளின் விமர்சனங்கள் மூலம் இரண்டு ரசிகர்களும் மோதிக் கொள்வதை கூட நீங்கள் பார்த்திருக்கலாம். எனினும், இந்த இரண்டு பிளாட்பார்ம்களும் தங்களுக்கே உரிய சாதக பாதகங்களை கொண்டுள்ளது என்பது தான் நிதர்சனம். இருப்பினும் ஆண்ட்ராய்டு பிளாட்பார்ம் ஆனது ஒரு சிறிய விளிம்பு அடிப்படையில் ஐஓஎஸ் பிளாட்பார்மை மிஞ்சுகிறது.

அப்படியாக எந்தெந்த சமாச்சாரங்களில் ஆண்ட்ராய்டு பிளாட்பார்ம் ஐஓஎஸ் பிளாட்பார்மை விட சிறந்ததாக திகழ்கிறது என்பதை பற்றிய தொகுப்பே இது.

தேர்வுகள் மிக அதிகம்

தேர்வுகள் மிக அதிகம்

இது நம் அனைவருக்குமே ஏற்கனவே நன்றாக தெரிந்த ஒன்றுதான். பல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-தனை பயன்படுத்துகிறார்கள். எனவே நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு போன் வாங்க வேண்டும் என்றால் தேர்ந்தெடுக்க ஒரு முடிவற்ற அளவிலான கருவிகள் கிடைக்கும். சாம்சங், எச்டிசி, சோனி, மோட்டோரோலா, எல்ஜி, ஹூவாய், இசெட்டிஇ போன்ற பல உற்பத்தியாளர்களின் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டே வருகின்றன. ஆப்பிள் கூட வழங்க ஒரு சில தேர்வுகள் கொண்டுள்ளது ஆனால் அது அளவு சார்ந்த வேறுபாடுகளில் மட்டுமே கிடைக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கஷ்டமைசேஷன்

கஷ்டமைசேஷன்

ஆண்ட்ராய்டு சிறந்ததாக திகழ இதுவொரு வலுவான காரணியாக இருக்கலாம். ஐஓஎஸ் உடன் ஒப்பிடும் போது ஆண்ட்ராய்டு ஒரு சீரான மென்பொருள் மற்றும் வன்பொருள் அனுபவத்தை அளிக்கிறது, மற்றும் பராமரிக்க இயல்புநிலை பயன்பாடுகள் கட்டுப்பாட்டை பயனர்களுக்கு வழங்குகிறது. அதாவது ஆண்ட்ராய்டு கருவிங்களை பயனர்கள் விரும்பும் ஒரு வழியில் கஸ்டமைஸ் செய்ய வழிவகுக்கிறது. உடன் பயனர்கள் வெவ்வேறு லான்ச்களை மற்றும் இலவச பயன்பாடுகளை நிறுவ முடியும். உடன் பயனர்கள் முற்றிலும் போனுடன் வரும் பேக்டரி செட்டிங்ஸ்தனில் மாற்றங்களை செய்யலாம்.

 அதிக இலவச ஆப்ஸ்கள்

அதிக இலவச ஆப்ஸ்கள்

அதிக பயன்பாடுகள் வழங்குதல் அல்லது மேற்பட்ட வருவாய் உருவாக்குதல் என்ற இரண்டு அடிப்படையில் கூகுள் ப்ளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு நிலையான போர் பூட்டப்பட்டுள்ளது. எனினும் ஒப்பிடுகையில் ஐஓஎஸ் ஆப்ஸ்களை விட ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் தான் 17 சதவீதம் அதிக பயன்பாடுகளை கொண்டுள்ளது. கூடுதலாக, 57 சதவீதம் இலவச பயன்பாடுகளை ஆண்ட்ராய்டு வழங்குகிறது, இது ஐஓஎஸ் வழங்கும் இலவச ஆப்ஸ்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை விட ஐஓஎஸ் ஆப்ஸ்கள் தான் அதிக வருவாய் ஈட்டுகிறது.

கூகுள் ஒருங்கிணைப்பு

கூகுள் ஒருங்கிணைப்பு

ஆண்ட்ராய்டு சிறப்பானதாக செயல்பட இதுவொரு முக்கிய காரணமாகும். கூகுள் உடன் ஆண்ட்ராய்டு சாதனங்களை இணைத்துக் கொள்ள முடியும். இதுவழியாக அதிக அளவிலான மக்கள் ஆன்லைன் சென்று கூகுள் சேவைகளை பயன்படுத்த தங்கள் மொபைல் சாதனங்கள் பயன்படுத்துகிறார்கள். ஆப்பிள் பயனாளிகளால் கூட கூகுள் ஒருங்கிணைப்பை நிகழ்த்த முடியும் என்றாலும் கூட ஆண்ட்ராய்டு போன்ற ஆழமான பயன்பாட்டை அணுக இயலாது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நியாயமான விலை

நியாயமான விலை

வெவ்வேறு பிராண்டுகளில் கிடைக்கும் என்பதால் ஐஓஎஸ் பயனர்களுக்கு போலல்லாமல் ஒரு மலிவான ஸ்மார்ட்போன் தேர்வு நிகழ்த்த ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பிகள் பல உண்டு. ஒரு குறிப்பிட்ட அளவிலான போன்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்க மாட்டார்கள்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அப்பாடா.. ஆர்வமுடன் எதிர்பார்த்த ஐபோன் 8 லீக்ஸ் தகவல்கள், வெளியானது.!

Best Mobiles in India

English summary
5 Reasons Why Android Users Feel More Awesome Than iPhone Users. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X