யுவராஜ் அதிரடி : ஆன்லைனில் பார்ப்பது எப்படி ?!

Posted by:

கிரிக்கெட் காலம் மீண்டும் வந்து விட்டது, தென் ஆப்ரிகா இந்தியாவில் 72 நாட்களுக்கு தங்கியிருந்து இந்தியாவிடம் டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட இருக்கின்றது. இத்தொடரை மிகவும் ஆவலோடு எதிர்பார்ப்பவர்களில் நீங்களும் ஒருவரா அப்படியானால் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான்.

உலகம் முழுவதும் நடைபெறும் கிரிக்கெட் போட்டி குறித்த அனைத்து தகவல்களையும் உடனடியாக வழங்க பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றது. இதில் பெரும்பாலான செயலிகள் பயனாளிகள் விரும்பும் தகவல்களை அளிப்பதோடு அவைகளின் சேவைகளும் சிறப்பாகவே இருக்கின்றன எனலாம்.

இந்தியாவின் பிரபல மொபைல் ப்ரவுஸரான யுசி ப்ரவுஸர் தனது யுசி கிரிக்கெட் செயலியை அப்டேட் செய்துள்ளது. இது முழுமையான கிரிக்கெட் சார்ந்த செயலியாகும். எளிமையான வடிவமைப்பு, மற்றும் எளிமையாக இயக்கும் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் யுசி கிரிக்கெட் செயலியில் நீங்கள் அவசியமாக அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் யுசி கிரிக்கெட் செயலியின் பயனாளி என்பதோடு இந்த செயலியில் ஏதேனும் மாற்றங்களை செய்யவும் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் கருத்துக்களை அவர் பகிர்ந்து கொள்வார். யுசி ப்ரவுஸர் செயலியின் விளம்பர தூதர் யுவராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்

கிரிக்கெட் போட்டிகளின் நேரடி தகவல்கள், விமர்சனம், வர இருக்கும் போட்டிகள், பேட்டிகள், புகைப்படம், வீடியோ மற்றும் பல சேவைகளை யுசி கிரிக்கெட் செயலி வழங்குகின்றது.

நினைவு

கிரிக்கெட் சார்ந்த தகவல்களை தவற விடாமல் இருக்க இந்த செயலியில் ரிமைன்டர் மற்றும் நோட்டிபிகேஷன் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. நோட்டிபிகேஷன் அம்சம் புதிய ஸ்கோர் மற்றும் முடிவுகளை பின்னணியில் அப்டேட் செய்து கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து

உலகம் முழுவதிலும் இருக்கும் கிரிக்கெட் ப்ரியர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

பரிசு

போட்டிகள் நடைபெறும் போது போட்டிகளில் கலந்து கொண்டு பயனாளிகள் பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளும் அதிகம் என்றே கூற வேண்டும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
5 reasons to watch cricket on UC Browser. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்