பிஎஸ்என்எல் சேவைக்கு மாற பிளான் போடுகிறீர்களா.? இதை கொஞ்சம் கவனிங்க.!

இந்திய மாநில தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அங்கீகார ஆரவாரத்துடன் உள்ளது என்றே கூறலாம். அப்படியாக நீங்கள் ஒரு புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெயிட் சிம் கார்டு வாங்க திட்டமிட்டால் அதை பெறுவதற்கு முன்..

Written By:

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் சுருக்கமாக பிஎஸ்என்எல் என்று அறியப்படும் இந்திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் புதுதில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 2015-ஆம் புள்ளிவிவரத்தின்படி 95 மில்லியன் பயனர்களை கொண்டுள்ள இந்தியாவின் பழமையான தொலைத் தொடர்பு சேவை பிஎஸ்என்எல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் 2000-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு சேவை ஒரு கடினமான காலங்களை கடந்து பின்னர், அதன் கவர்ச்சிகரமான சலுகைகள் மூலம் நாடு முழுவதும் இருந்து கவனத்தை பெற்றது. நீங்கள் பிஎஸ்என்எல் நெட்வொர்க் சேவைக்கு மாற போகும் திட்டம் கொண்டிருந்தால் அல்லது நீங்கள் ஒரு புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்க யோசித்தால் நீங்கள் பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஐந்து விடயங்கள் உள்ளன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சிம் அட்டையின் விலை வெறும் ரூ.20/- தான்.!

பிற நிறுவனங்கள் போல கொள்ளை விலைக்கு தங்களின் சிம் கார்ட்களை விற்காமல் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் தனது சிம் கார்ட்டை வெறும் 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது உடன் வெறும் 24 மணி நேரத்திற்குள் செயல்படுத்தப்படுகிறது. எனினும், நீங்கள் ஒரு நானோ சிம் அட்டை தேடுகிறீர்கள் என்றால்அதற்கு ரூ.59/- செலவாகும்.

உங்கள் விருப்ப எண்ணை ஆன்லைனில் தேர்வு செய்யலாம்.!

பிஎஸ்என்எல் உங்களுக்கு பிடித்தமான மொபைல் எண் தேர்வு செய்யும் வசதியையும் வழங்குகிறது. இதை நீங்கள் ஆன்லைன் மூலம் நிகழ்த்தலாம். எனினும் இதை நிகழ்த்த நீங்கள் அருகாமை பிஎஸ்என்எல் அலுவகத்தில் உங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதிருக்கும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நெட்வெர்க் டிராப் மற்றும் கால் டிராப்

பிஎஸ்என்எல் நாடு முழுவதும் அவர்களது 4ஜி உரிமம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒரு விடயமாகும் மற்றும் சில நேரங்களில் நீங்கள் நெட்வெர்க் டிராப் மற்றும் கால் டிராப் ஆகியவைகளை சந்திக்கவும் நேரிடும்.

பிஎஸ்என்எல் - ரிலையன்ஸ் ஜியோ

சமீபத்தில், பிஎஸ்என்எல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் உதவியை ரோமிங் கால்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தம் செய்திருந்தது அதே போல பிஎஸ்என்எல்-ன் 2ஜி தரவு சேவையை ஜியோ பயன்படுத்திக் கொள்கிறது ஆனால் டேட்டா இணைப்புகள் சார்ந்த பயன்பாடு எதுவும் கிடையாது.

ஆக்டிவேட் செய்வதென்பது

பிஎஸ்என்எல் சிம் கார்டு ஆக்டிவேட் செய்வதென்பது கடினமான பணி ஒன்றுமில்லை. சிம் அட்டை உங்கள் கைகளில் கிடைத்த பின்னர் சிம் அட்டை 24 மணி நேரத்திற்குள் செயலாக்கப்படும். வழக்கமான டெலி வெரிஃபிகேஷன்படி, டிராய் விதிமுறைகளின் படி சரிபார்ப்புகள் நடத்தப்படும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Check Out the 5 Most Important Things Before Buying a BSNL Prepaid SIM Card. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்