நம்ம வாழ்க்கை நல்லா போகுதா..? நாசமா போகுதா..?!

Written By:

சுமார் ஒரு நாலு வருஷத்துக்கு முன்னால.. தூங்கி எழுந்ததும்.. பல் துலக்கிட்டு டீ குடிக்கலாமா..? இல்ல அப்பிடியே டீ குடிக்கலாமா..? என்பது தான் நம்மளோட முதல் சிந்தனையாக இருக்கும். ஆனால் இப்போதோ.. ஒரு செல்பீ எடுத்து.. "வோக்டு அப்" (Woked Up) என்று டைப் செய்து யாருக்காச்சும் அனுப்பிவிட்டுட்டு.. உடனே.. ஃபேஸ்புக்ல இன்னைக்கு என்ன கருத்து சொல்லலாம்..? இன்ஸ்டாகிராம்ல இன்னைக்கு என்ன போட்டோ போடலாம்..? என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறோம்..!

கொஞ்சம் நேரம் அமைதியாக ஊட்காந்து யோசித்தால், இதெல்லாம் நாம் ஏன் செய்கிறோம்..? எதற்காக செய்கிறோம்..? என்று நமக்கே புரியாது. அதே சமயம் இதெல்லாம் செய்யாமல் நம்மால் இருக்கவும் முடியாது.

அந்த மாதிரியான நேரத்தில் தான் நமக்கு ஒரு கேள்வி எழும் - நம்ம வாழ்க்கை நல்லா போகுதா..? நாசமா போகுதா..?!நம்ம வாழ்க்கை நிஜமாகவே எப்படி போகுதுனு.. கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ள 16 ஓவியங்கள் உணர்த்தும்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

01. வேற்று கிரகவாசி :

மொபைல் இல்லாதவர்கள் வேற்று கிரகவாசி போல் உணர்வார்கள்..!

02. போஸ்ட் :

அனுபவிப்பதோ கால் கிலோ.. ஆனால், போஸ்ட் செய்வதோ 200 கிலோ..!

03. வளர்ச்சி :

நிஜமாகவே.. பெரிய வளர்ச்சி தான் ?!

04. போட்டோ :

பிடிச்சவங்கள போட்டோ எடுக்குறத மறந்து ரொம்ப நாள் ஆச்சி..! இல்ல..??

05. அடிமை :

மறுபடியும் நாம் அனைவரும் அடிமையாகி விட்டோம்..! அப்படி தானே !?

06. ரசிப்புத்தன்மை :

வீடியோ ரெக்கார்ட்டிங் பழக்கம் நம்மையும் நம் ரசிப்புத்தன்மையையும் தொலைத்து விட்டது.

07. உரையாடல் ;

சாப்பிடும் போது நிகழ்த்தப்படும் உரையாடல்களை இப்போதெல்லாம் கேட்க முடிவதில்லை..!

08. புதுவகை :

புதுவகையான வெயிலால் ஏற்படும் மேல் நிறம் (Tan)..!

09. தனி்மை :

நாம் தனியாக இருப்பதாய் உணர முடியவில்லை..!

10. பிராத்தனை :

உணவருந்தும் முன்பு பிராத்தனையெல்லாம் செய்ய வேண்டாம், கிளிக் செய்தால் போதும்..!

11. அறிவு :

தொழில்நுட்ப கருவிகளின் வடிவமும் நம் அறிவும் சிரிதாகி கொண்டே போகிறது..!

12. ஆப்பிள் :

எல்லோருக்குமே ஆப்பிள் தேவைப்படுகிறது..!

13. கேமிரா :

புதிதாய் பிறந்த குழந்தை சந்திக்கும் கேமிராக்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.

14. ஓடிப்போய்விட்டது :

காதல்...? காணமால் போய் விட்டது என்று சொல்வதை விட ஓடிப்போய்விட்டது என்று சொல்லலாம்.

15. போஸ்ட் :

சாப்பிடுவதை விட, "சாப்பிடும்கிறோம்..!" என்ற போஸ்ட் தான் முக்கியம்.!?

16. சிலை :

அடுத்த தலைமுறை சிலைகளின் கைகளில், மொபைல் போன் இருந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.!!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
16 Ways Technology Has Completely Taken Over And Ruined Our Lives. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்