ஷூ போட்டு நடந்தால் போன் சார்ஜ் ஆகும் 15 வயது சிறுவன் அசத்தல் கண்டுபிடிப்பு.!!

Written By:

ஏஞ்சலோ கசிமிரோ என்ற 15 வயது சிறுவன் தன் கற்பனை மற்றும் விடா முயற்சியின் மூலம் சர்வதேச செய்திகளில் இடம் பிடித்துள்ளார். தான் கண்டறிந்த எளிய முறை கண்டுபிடிப்பு அவரைச் செய்திகளில் இடம் பிடிக்கச் செய்துள்ளது. அப்படி அவர் எதைக் கண்டுபிடித்தார்.

ஷூ போட்டு நடந்தால் போன் சார்ஜ் ஆகும் சிறுவன் அசத்தல் கண்டுபிடிப்பு.!!

காலணி எனப்படும் ஷூ அணிந்து நடந்தால் போதும் உடலில் இணைக்கப்பட்ட சிறிய கருவி இலவசமாகத் தயாரிக்கப்படும் மின்சாரத்தைச் சேமிக்கும். ஒவ்வொரு முறை அடியெடுத்து வைக்கும் போதும் இந்தக் கருவியில் மின்சாரம் சேமிக்கப்படும்.

இதையும் பாருங்கள் : கண்டுபிடிப்புகள் புதுசு தான், ஆனா அது ரொம்ப பழசு!!

பைஸேஎலெக்ட்ரிசிட்டி (Piezoelectricity) பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஷூ ஒவ்வொரு முறை அழுத்தம் கொடுக்கும் போதும் மின்னழுத்த மாற்று உருவாகின்றது. பைஸேஎலெக்ட்ரிக் முறை 18 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து வழக்கத்தில் இருக்கின்றது எனச் சிறுவனின் பிளாக் போஸ்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷூ போட்டு நடந்தால் போன் சார்ஜ் ஆகும் சிறுவன் அசத்தல் கண்டுபிடிப்பு.!!

தனது 11 வயது முதல் இந்தக் கற்பனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் முயற்சியில் அயராது உழைத்த சிறுவன் தனது கண்டுபிடிப்பினை உலகிற்கு எடுத்துரைக்கும் காலம் வந்து விட்டது. சிறுவனின் கண்டுபிடிப்பு மூலம் மனிதர்கள் நடக்கும் போதே தங்களது செல் போன்களுக்கு சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இதையும் பாருங்கள் : கூகுள் மேப்ஸில் மறைக்கப்படும் இடங்கள், உள்ளே இருப்பது இதுதான்..!?

ஓபன் சோர்ஸ் முறையில் தனது கண்டுபிடிப்பினை வழங்கியிருக்கும் ஏஞ்சலோ இதன் மூலம் இந்தக் கருவியினை மேம்படுத்தும் உரிமையை விருப்பமுள்ளவர்களுக்கு வழங்கியுள்ளார். எனினும் இந்தக் கருவி அதிகளவு தயாரிப்பதற்கு இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
15 Year Old Invents Device That Generates Electricity While You Walk Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்