உங்கள் மொபைலில் டேட்டாவை சேமிக்க 12டிப்ஸ்.!

உங்கள் ஸ்மார்ட்போனில் பாடல் மற்றும் யூட்யூப் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்வது அதிக டேட்டாவை எடுத்து கொள்ளும்.!

By Prakash
|

இன்றைய ஸ்மார்ட்போன்கள் அதிகமாக பயன்படுவது இன்டர்நெட் சேவைகளுக்கு தான், மேலும் மனிதர்கள் அன்றாட வாழ்க்கையில் தற்போது அதிகம் பயன்படுவது இந்த இன்டர்நெட் தான், இன்று மொபைல் போன்களில் டேட்டா பயன்பாடு அதிகமாக இழுக்கப் படுவது என்பது பெரும்பாலானோரும் சந்திக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது.

நீங்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர டேட்டா செலுவு தற்போது அதிகமாக விலைஉயர வாய்ப்பு உள்ளது, மேலும் ஸ்மார்ட்போன்களில் இன்டர்நெட் பயன்படுத்தி படங்கள் மற்றும் பாடல்கள் போன்றவற்றை பார்ப்பதால் மிக எளிமையாக விரைவில் தீர்ந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

டேட்டா சேவிங் டிப்ஸ்-01:

டேட்டா சேவிங் டிப்ஸ்-01:

பயன்படுத்தாத ஆப்ஸாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவு டேட்டாவை தின்றுகொண்டே இருக்கும். எனவே செட்டிங்ஸில் டேட்டா ஆப்ஷனை செலக்ட் செய்துகொள்ளுங்கள். தேவையில்லாமல் டேட்டா செலவாவது தவிர்க்கப்படும்.

டேட்டா சேவிங் டிப்ஸ்-02:

டேட்டா சேவிங் டிப்ஸ்-02:

நம் மொபைலில் தினமும் பல ஆப்களை உபயோகம் செய்வோம். வேலை முடிந்ததும் அப்படியே வெளியில் வந்து விடுவோம். இதனால் உங்கள் டேட்டா மற்றும் பேட்டரி அதிகமாக பாதிக்கப்படுகிறது. மேலும் ஆப்களை முறைப்படிப் பயன்படுத்தவேண்டும். அப்போது தான் டேட்டாவை சில நாட்கள் வரைப்பயன்படுத்த முடியும்.

டேட்டா சேவிங் டிப்ஸ்-03:

டேட்டா சேவிங் டிப்ஸ்-03:

உங்கள் மொபைல்போனில் கூகுள் க்ரோம் போன்றவை பயன்படுத்தினால் அதிகம் டேட்டா எடுத்துக்கொள்ளும், அதற்க்கு பதில் கூகிள் அறிமுகம் செய்துள்ள க்ரோம்பீட்டா உலாவி அதிக இணையத்தை மிச்சப்படுத்தும். க்ரோம் பக்கங்களில்தான் அதிக நேரம் செலவிடுவோம் என்பதால் அவைதான் டேட்டாவை அதிகம் காலி செய்யும். எனவே க்ரோம் செட்டிங்ஸில் டேட்டா சேவரை ஆன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் பிரவுஸ் செய்யும்போது பக்கங்கள் கொஞ்சம் மெதுவாக லோட் ஆகும். ஆனால் டேட்டா கண்டிப்பாக நிறையவே மிச்சப்படும்.

டேட்டா சேவிங் டிப்ஸ்-04:

டேட்டா சேவிங் டிப்ஸ்-04:

இன்டர்நெட்டில் பதிவேற்றம் செய்வதும் அதிக டேட்டாவினை பயன்படுத்தும். முடிந்த வரை பதிவேற்றங்களை குறைத்து கொள்வது நல்ல பலன்களை தரும், குறிப்பாக இன்டர்நெட்டில் வீடியோ மற்றும் விளையாட்டுப்போன்றவற்றை அதிகமாக தவிர்க்கவும். சமூகவலைதளங்கள் போன்றவை பயன்படுத்தி முடித்த பின் டேட்டாவை பயன்படுத்தக் கூடாது.
உங்கள் ஸ்மார்ட்போனில் பாடல் மற்றும் யூட்யூப் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்வது அதிக டேட்டாவை எடுத்து கொள்ளும், மாறாக அவைகளை பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். மேலும் டேட்டா மிக விரைவில் குறையக் காரணம் யூட்யூப் வீடியோ.

டேட்டா சேவிங் டிப்ஸ்-05:

டேட்டா சேவிங் டிப்ஸ்-05:

ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சில ஆப்கள் அதிகம் டேட்டாவை உள்வாங்கும். எனவே டேட்டா லிமிட் செட் செய்து வைத்துக்கொள்வது நல்லது. வேறு வழியே இல்லையென்றால் உங்கள் டேட்டா மிக விரைவில் தீர்ந்துவிடும். எந்த ஆப் தேவையோ அதனை மட்டும் பயன்படுத்துங்கள். தேவை இல்லாத ஆப்களை இன்ஸ்டால் செய்து உங்கள் மெமரி மற்றும் பேட்டரியை வீணாக்கமல் பார்த்துக்கொள்ளுங்கள்

டேட்டா சேவிங் டிப்ஸ்-06:

டேட்டா சேவிங் டிப்ஸ்-06:

கூகுள்மேப் போன்றவை அதிகநேரம் இயக்கினால் மிகவிரைவில் டேட்டா குறைந்துவிட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இவற்றை தேவையான நேரங்களில் மட்டும் பயன்படுத்தினால் மட்டும் நல்லது.

டேட்டா சேவிங் டிப்ஸ்-07:

டேட்டா சேவிங் டிப்ஸ்-07:

இன்டர்நெட் பயன்படுத்தி அதிகம் பாடல்கள் கேட்பவராய் இருந்தால் ஒரு தடவை ஸ்ட்ரீம் ஆனதும் ஆப்லைன் செய்துவிடவேண்டும். இதன் மூலம் அதிகநாட்கள் டேட்டாவை சேமிக்கமுடியும். தற்போது அதிக ஸ்மார்ட்போன்கள் பாடல்கள் கேட்கதான் அதிமாகப்பயன்படுகிறது.

டேட்டா சேவிங் டிப்ஸ்-08:

டேட்டா சேவிங் டிப்ஸ்-08:

உங்கள் ஆண்ட்ராய்டு ஆப் பொருத்தமாட்டில் அப்டேட் செய்ய வைபை போன்றவை பயன்படுத்திக்கொள்வது மிகவும் நல்லது. மேலும் டேட்டாவை அதிமாக இவை சேமிக்கிறது. 15 தினங்களுக்கு ஒருமுறை வைபை முறையில் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

டேட்டா சேவிங் டிப்ஸ்-09:

டேட்டா சேவிங் டிப்ஸ்-09:

மொபைலில் இருக்கும் ஆப்கள் அனைத்துமே இணையத்தில் சர்வருக்கு பிங் செய்து கொண்டிருக்கும். இதனால் உங்கள் மொபைல் டேட்டா விரைவில் காலியாகலாம். எனவே இதை தடுப்பதன் மூலம் இணையப் பயன்பாட்டை தடுக்கலாம். மொபைல் செட்டிங்ஸில் டேட்டா பயன்பாட்டில் தேவையில்லாத ஆப்கள் பிங் செய்வதை நிறுத்திவிடலாம்.

டேட்டா சேவிங் டிப்ஸ்-10:

டேட்டா சேவிங் டிப்ஸ்-10:

மொபைல் மூலம் ஆன்லைனில் கேம்ஸ் விளையாடுவதை தவிர்ப்பது நல்லது. இதனால் அதிக மொபைல் டேட்டா வீணாகும். மேலும் உங்கள் மொபைல் பேட்டரி மிகவிரைவில் பாதிக்கப்படும் நிலைமை உள்ளது.

டேட்டா சேவிங் டிப்ஸ்-11:

டேட்டா சேவிங் டிப்ஸ்-11:

உங்களுக்கு தேவையில்லாதவைகளை டவுன்லோடு செய்யாதீர்கள். பதிவிறக்கம் செய்வதானால் வைபை பயன்படுத்தலாம் இது மொபைல் டேட்டாவை சேமிக்கும். மேலும் வீடியோக்கள் அளவிற்கு விளம்பரங்களும் டேட்டாவை காலி பண்ணும். எனவே முடிந்த வரை விளம்பரங்களை ஸ்கிப் செய்துவிடுங்கள்.

டேட்டா சேவிங் டிப்ஸ்-12:

டேட்டா சேவிங் டிப்ஸ்-12:

அதிகமாக தேவையில்லாத சின்க் செட்டிங்ஸ்களை நிறுத்திவைப்பது மிகவும் நல்லது, மேலும் இவற்றை மெயின் செட்டிங்ஸ் சென்று இவற்றை செயல்முறைப்படுத்தமுடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
12 tips to curb data usage in Android: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X