'ஸ்டார்வார்ஸ்' ரிலீஸ்க்கு முன்பு இதை கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க..!

Written By:

விண்வெளி சாகச திரைப்படமான ஸ்டார் வார்ஸ்-ன் முதல் பாகம் 1977-ஆம் ஆண்டு வெளியானது. அதன் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பல 'ஸ்டார் வார்ஸ்' பாகங்கள் வெளியாகின, வெற்றியும் பெற்றன. அதை தொடர்ந்து மிக நீண்ட காலம் கழித்து நாளை மறுநாள் (டிசம்பர் 14, 2015) வெளியாக இருக்கிறது ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் தொடர் பாகமான - ஸ்டார் வர்ஸ் தி ஃபோர்ஸ் அவேகன்ஸ்..!

இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெளியான போது மிகப்பெரிய விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்தது. ஆனால் ஸ்டார் வார்ஸ்-ன் வெற்றி தான் அனைத்து கேலிகளுக்கும் பதிலாக அமைந்தது என்பது தான் நிதர்சனம்.

அந்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி பல புத்தம்புது சிந்தனைகளுக்கும், கண்டுப்பிடிப்புகளுக்கும், ஸ்டார்வார்ஸ் வழி வகுத்தது. அவைகள் என்னென்ன என்பதை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

12. விண்வெளி பயணம் :

மிகவும் சிக்கலான விண்வெளி பயணங்களை ஒரு சாகசமாக மாற்றியதில் ஸ்டார் வார்ஸ் திரைப்படத்திற்குக்கும் பங்கு உண்டு.

11. ப்ரோஸ்தெடிக்ஸ் :

செயற்கை கைகள் (prosthetics) மற்றும் உடல் பாங்களை காட்சிப்படுத்தி ஊக்குவித்த பெருமையும் ஸ்டார் வார்ஸ்-க்கு உண்டு.

10. ஈரப்பத வேப்ரேட்டர்கள் :

ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட காற்றில் இருக்கும் ஈரப்பதத்தினை நீராக மாற்றும் கருவி தற்போது இன்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

09. ஹோலோகிராஃபி :

அறிவியல் கற்பனையான ஹோலோகிராஃபி (Holography) எனப்படும் முப்பரிமாண ஒளிப்படவியல் தற்போது மிகவும் பிரபலாமகி கொண்டிருக்கிறது.

08. மின்னணு தொலைநோக்கி :

அதிநவீன எலெக்ட்ரானீக் தொலைநோக்கியும் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

07. ட்ராக்டர் பீம்ஸ் :

ட்ராக்டர் பீம்ஸ் (Tractor Beams ) என்பது தூரத்தில் இருந்து மற்றொரு பொருளை ஈர்க்கும் திறன் கொண்ட ஒரு சாதனம் ஆகும். இதன் மீதான அறிவியல் ஆர்வத்தை தூண்டியதும் ஸ்டார் வார்ஸ் தான்.

06. ஜெட்பேக்ஸ் :

ஸ்டார் வார்ஸ் திரைப்பட யுத்த காட்சிகளில் மிகவும் பிரபலமான முதுகில் மாட்டிக்கொள்ளும் படியான ஜெட்பேக்கள் இன்று நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

05. எனர்ஜி ஷீல்ட் :

ஆற்றல் துகள்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியை பாதுகாக்கும் அறிவியல் புனைக்கதை தொழில்நுட்பம் தான் எனர்ஜி ஷீல்ட் (Energy Shield) எனப்படும். இதுவும் தற்போது சாத்தியமே என்று கூறப்படுகிறது.

04. டிராய்டுகள் :

ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட டிராய்டு (Droid) போன்ற ரோபோட்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

03. பிளாஸ்டர்ஸ் :

லேசர் மூலம் தாக்கும் ஆயுதமே பிளாஸ்டர் (Blasters) எனப்படுகிறது. இதுவும் தற்போது சாத்தியமே.

02. ஸ்பீடர் பைக்ஸ் :

பறக்கும் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் உருவாக்க முறையை பின்பற்றி, ஸ்டார் வார்ஸ் பாணியில் வேகமாக பயணிக்கும் படியான ஹோவர் பைக்களும் தற்போது உருவாக்கம் பெற்றுள்ளன.

 

01. லைட்ஸாபர்ஸ் :

ஸ்டார் வார்ஸ் என்று சொன்னதும், நம் நினைவிற்கு வரும் இந்த லைட்ஸாபர்களும் (Lightsaber) தற்போது சந்தையில் கிடைக்கிறது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
12 Tech Inventions From Star Wars That Already Exist Today. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்