ஆப்பிள் நிறுவனம் பின்வாங்கிய 11 பிரபல பொருட்களின் பட்டியல், உங்களுக்கு தெரியுமா?

Written By:

தொழில்நுட்ப சந்தையில் தினமும் பல நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் சிந்தனைவாதிகளின் முயற்சியில் பல புதிய கருவிகள் மற்றும் பொருட்கள் வெளியான வண்னம் உள்ளன. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் தொழில்நுட்ப சந்தையில் மிகவும் பிரபலம் என்பதோடு அந்நிறுவனத்தின் பொருட்கள் சந்தையில் வெளியாவதற்கு முன்பே மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை பெருவதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஆப்பிள் நிறுவனத்தின் பல பொருட்கள் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதோடு சில பொருட்கள் எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்றும் கூறலாம். வெற்றி தோல்வி வியாபாரத்தில் சகஜமானது தான். ஆப்பிள் நிறுவனம் சந்தையில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில் அந்நிறுவனம் காலப்போக்கில் பின்வாங்கிய 11 பொருட்களின் பட்டியலை தான் இங்கு நீங்க பார்க்க போறீங்க. புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

ஐபோன் 3ஜிஎஸ் மாடலில் தான் முதன் முதலில் 32 ஜிபியில் வெளியானது, அதன் பின் ஐபோன் 4எஸ், 5 மற்றும் 5எஸ் மாடல்கள் 32 ஜிபியில் வெளியானது, ஆனால் சமீபத்தில் வெளியான ஐபோன் 6 மற்றும் 6+ 32 ஜிபி இல்லாமல் 16, 64 மற்றும் 128 ஜிபிக்களில் மட்டும் தான் வெளியிடப்பட்டுள்ளது.

2

2005 ஆம் ஆண்டு வெளியான ஐபாட் நானோ பல முறை வடிவமைக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு 1.55 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 2012 ஆம் ஆண்டு சதுர வடிவ ஐபாடை நீண்டசதுரமாக மாற்றியது

3

முதலில் பயன்படுத்தப்பட்ட 30-பின் கனெக்டர் கேபிள் 2012 ஆம் ஆண்டு லைட்னிங் கேபிளாக மாற்றப்பட்டது.

4

ஐபோன் 5எஸ் மற்றும் 5சி 2013 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது ஆனால் சில காரணங்களுக்காக ஐபோன் 5 பின்வாங்கப்பட்டது

5

2011 ஆம் ஆண்டு வெளியான ஐபேட் 2 அதன் முந்தைய மாடலை விட சிறப்பாக வடிவமைக்கப்பட்டாலும் அதன் பின் ரெட்டினா டிஸ்ப்ளே வைத்து வெளியான ஐபேட் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த மாடல் கைவிடப்பட்டது

6

மார்ச் 2012 ஆம் ஆண்டு வெளியான ஐபேட் அதே ஆண்டின் அக்டோபர் மாதம் பின் வாங்கப்பட்டது

7

2006 ஆம் ஆண்டு வெளியான மேக்புக் கல்வியை வலியுறுத்தியது, 2011 ஆம் ஆண்டு மேக்புக் ஏர் வெளியான போது இந்த மாடல் கைவிடப்பட்டது

8

2007 ஆம் ஆண்டு வெளியான ஐபோன் வரிசையில் ஐபாட் கிளாசிக் வெளியிடப்பட்டது, 160 ஜிபி ஸ்பேஸ் மற்றும் 40,000 பாடல்களை பதிவு செய்யும் வசதி கொண்ட ஐபாட் கிளாசிக் தற்போது விற்பனையில் இல்லை

9

துவக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஐவெப் 2012 ஆம் ஆண்டில் ஐக்ளவுடாக மாற்றப்பட்டது

10

ஆரம்பத்தில் வெள்ளை நிற ஹெட்போன்கள் ஐபோன் பயனாளிகளை தனித்துவப்படுத்தியது, ஆனால் காலப்போக்கில் அதன் வடிவமைப்பு அதிகம் மாறிவிட்டது என்றே கூறலாம்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
11 Products which Apple killed silently. Here you will find 11 products that Apple Killed Silently.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்