100 வருடம் பழைமையான பெட்டி : உள்ளே இருந்தது என்ன..?

|

சமீபத்தில் பனி பிரதேசமான அண்டார்டிக்காவில், நியூஸிலாந்தை சேர்ந்த அண்டார்டிக் பாரம்பரிய அறக்கட்டளை ஆய்வில் ஈடுபட்ட போது, 100 வருடம் பழைமையான பெட்டி ஒன்று பனிப்பாறை ஒன்றில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இன்னும் 100 வருடம் ஆனாலும் கண்டுப்பிடிக்க முடியாத மர்மங்கள்..!

பனிப்பாறையின் ஒரு பகுதிக்குள் மிகவும் பாதுகாப்பாக இருந்த அதை திறந்து பார்த்தப்பின்னரே தெரிந்தது அது வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க புதையல் என்று..!

புகைப்பட நெகடீவ்கள் :

புகைப்பட நெகடீவ்கள் :

100 வருடம் பழைமையான அந்த பெட்டிக்குள் இதுவரை யாருமே அறிந்திராத செல்லுலோஸ் நைட்ரேட் புகைப்பட நெகடீவ்கள் (Cellulose nitrate negatives) இருந்தன.

நிலை :

நிலை :

மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அந்த செல்லுலோஸ் நைட்ரேட் நெகடீவ்கள் புகைப்படங்களாக உருவாக்கப்படும் நிலையில் இருந்தன.

ஆவணம் :

ஆவணம் :

அவைகள் 100 ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிக்கா பிரதேசம் ஆவணப்படுத்தலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று அவைகளை புகைப்படங்களாக உருவாக்கி ஆராய்ந்த பின்னரே தெரிய வந்தது.

அச்சு :

அச்சு :

100 ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கிடந்ததால் முதலில் நெகடீவ்களை பிரிக்க கடினமாக இருந்துள்ளது. பின் அச்சுகளை சுத்தம் செய்து தனித்தனியாக பிரித்து உள்ளனர்.

டிஜிட்டல் :

டிஜிட்டல் :

தனித்தனியாக நெகடீவ்களை பிரிக்கும் மிகவும் கடினமான வேலைகளுக்கு பின்னரே அந்த நெகடீவ்கள் டிஜிட்டல் கால புகைப்படங்களாக உருவாக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

1914 - 1917 :

1914 - 1917 :

இந்த பெட்டி 1914 - 1917 காலகட்டத்தில் தவற விடப்பட்டு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, எர்நஸ்ட் ஷாக்லேடனின் (Ernest Shackleton) ரோஸ் சீ பார்ட்டி (Rose Sea Party) மூலம் தவறவிடப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படம் : அண்டார்டிக் பாரம்பரிய அறக்கட்டளை

Best Mobiles in India

English summary
பனி பிரதேசமான அண்டார்டிக்காவில் கிடைத்த 100 வருடம் பழைமையான பெட்டி. மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X