மைக்ரோசாப்ட் இறுதி பரிசு, இதான் பெஸ்ட்..!

By Meganathan

அவ்வளவு தான் இனிமே நாங்க விண்டோஸ் இயங்குதளத்தை வெளியிட மாட்டோம் என்கின்ற அளவிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தை வெளியிட்டுள்ளது.

விண்டோஸ் 10 இலவசமாக இன்ஸ்டால் செய்வது எப்படி..?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளம் குறித்து பல்வேறு தரப்பட்ட தகவல்கள் வெளியானாலும் உண்மையில் இயங்குதளம் எவ்வாறு உள்ளது என்பது பயனாளிகளுக்கு மட்டும் தான் வெளிச்சம்.

'விண்டோஸ் 10' - ஏன் டா ஏன்..?

இங்கு விண்டோஸ் 10 இயங்குதளத்தில் கவனிக்கப்பட வேண்டிய சில முக்கியமான சிறப்பம்சங்களை தான் தொகுத்திருக்கின்றோம்..

ஸ்டார்ட் மெனு

ஸ்டார்ட் மெனு

விண்டோஸ் 10 மெனுவில் சர்ச் பார் மற்றும் கார்டனா இன்டகிரேஷன் மற்றும் பழைய விண்டோஸ்களில் வழங்கப்பட்ட ஸ்டார்ட் மெனு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

கமாண்டு ப்ராம்ப்ட்

கமாண்டு ப்ராம்ப்ட்

அதிகம் பயன்படுத்துபவர்களுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் கமான்டு ப்ராம்ப்டில் அதிக மேம்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது. இனி கமாண்டு ப்ராம்ப்டிலும் பயனாளிகள் Ctrl+C, Ctrl+V போன்ற கமாண்டுகளை பயன்படுத்த முடியும்.

விண்டோஸ் ஹெல்லோ

விண்டோஸ் ஹெல்லோ

ஃபேஸ் ரிகஃக்னீஷன் தொழில்நுட்பத்தை சார்ந்து விண்டோஸ் 10 இயங்குதளத்தில் ஹெல்லோ என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கைரேகை சென்சார் மற்றும் பயோமெட்ரிக் சென்சார்களை பயன்படுத்த முடியும் என்பதோடு ரியல்சென்ஸ் 3டி கேமரா மற்றும் 3டி டெப்த் சென்சிங் போன்றவைகளை அனுபவிக்க முடியும்.

எட்ஜ் ப்ரவுஸர்
 

எட்ஜ் ப்ரவுஸர்

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்றாக இம்முறை மைக்ரோசாப்ட் நிறுவனம் எட்ஜ் எனும் புதிய ப்ரவுஸரை வழங்கி இருக்கின்றது. இதன் இன்டர்ஃபேஸ் கூகுள் க்ரோம் போன்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கண்டினியம்

கண்டினியம்

விண்டோஸ் 10 இயங்குதளம் அனைத்து கருவிகளிலும் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயங்குதளம் கண்டனியம் எனும் அம்சம் கொண்டிருக்கின்றது.

கார்டனா

கார்டனா

விண்டோஸ் 10 இயங்குதளத்தின் முக்கிய சிறப்பம்சமாக கார்டனா விளங்குகின்றது. முற்றிலும் குரல் மூலம் இயங்கும் இந்த சேவை உதவி ஆள் போன்று விளங்கும்.

ஆக்ஷன் சென்டர்

ஆக்ஷன் சென்டர்

மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளங்கள் சார்ந்த நோட்டிபிகேஷன்களை காட்டும் புதிய அம்சம் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

யுனிவர்சல் சர்ச்

யுனிவர்சல் சர்ச்

ஆப்பிள் ஓஎஸ் எக்ஸ் இயங்குதளத்தில் இருப்பதை போன்ற ஸ்பாட்லைட் அம்சம் விண்டோஸ் 10 இயங்குதளத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வித தேடல்களையும் மேற்கொள்ள முடியும்.

ஸ்னாப் என்சாண்ட்மென்ட்ஸ்

ஸ்னாப் என்சாண்ட்மென்ட்ஸ்

ஒரே திரையில் நான்கு ஆப்ஸ்களை பயனாளிகள் வைத்து கொள்ள முடியும். இதோடு தனியாக இயங்கும் மற்ற செயலிகளையும் பார்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டாஸ்க் வியூ

டாஸ்க் வியூ

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் பயனாளிகள் வெவ்வேறு டெஸ்க்டாப்களை உருவாக்க முடியும்.

 
Read more about:
English summary
check out here the 10 Hottest Features Microsoft Windows 10. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X