அதிக நேரம் ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்தினால் ஏற்ப்படும் பாதிப்புகள் என்ன?

ஸ்மார்ட்போன் காட்சிகள் மூலம் வெளிவரும் நீல நிற வெளிப்பாடு உங்கள் கண் விழித்திரையை சேதப்படுத்தும்.!

By Prakash
|

இந்தியாவில் 300 மில்லியன் ஸ்மார்ட்போன் பயன்படுகிறது மேலும் அதிகமக்கள் பல்வேறு செயல்பாட்டிற்க்கு இந்த ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். மேலும் ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கையில் பொறுத்தமட்டில் 2016 ஆம் ஆண்டில் 18% அதிகரித்துள்ளது.

ஸ்மார்ட்போன் இயக்குவதற்க்கு மிக அருமையாக இருக்கும். மேலும் ஸ்மார்ட்போனில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகமாக உள்ளது, ஷாப்பிங் பட்டியல்கள், திரைப்பட டிக்கெட், விமான டிக்கெட், விளையாட்டு போன்ற பல்வேறு சேவைகள் இவற்றில் உள்ளது. ஸ்மார்ட்போனில் உள்ள கேமராக்கள் பல்வேறு செயல்திறனைனக் கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போன்:

ஸ்மார்ட்போன்:

ஸ்மார்ட்போன் அல்லது டேப்லேட் போன்றவை இரவுநேரத்தில் அதிகம்பயன்படுத்தும்போது பல்வேறு பாதிப்புகள் ஏற்ப்பட வாய்ப்ப உள்ளது. இவற்றை இரவில் பயன்னபடுத்தினால் ஹார்மோன் பிரச்சனைகள் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம்:

மன அழுத்தம்:

இவற்றில் வரும் சில அழைப்புகள், செய்திகள், சமூக மீடியா அறிவிப்புகள் இ மற்றும் மின்னஞ்சல்கள் போன்றவற்றினால் அதிக மனஅழுத்தம் வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றை குறிப்பிட்ட நேரம் மட்டும் பயன்படுத்தினால் மிகவும் நல்லது. மேலும் இது இரவில் உங்கள் வேலை நேரங்களை அதிகரிக்கிறது இதனால் மன அழுத்தம் வருவதற்க்கு அதிக வாய்ப்பு உள்ளது.

கண் சிரமம்:

கண் சிரமம்:

ஸ்மார்ட்போன் காட்சிகள் மூலம் வெளிவரும் நீல நிற வெளிப்பாடு உங்கள் கண் விழித்திரையை சேதப்படுத்தும். விழித்திரை சேதம் மைய பார்வை இழப்பு ஏற்படுத்தும் . ஸ்மார்ட்போன் பொறுத்தமட்டில் அதிக மக்கள் பார்வை அளவு குறைந்துள்ளது என சில தகவல் வெளியாகி உள்ளது.

60 டிகிரி:

60 டிகிரி:

வழக்கமாக, மக்கள் ஒரு ஸ்மார்ட்போன் பயன்படுத்த 60 டிகிரி வரை தங்கள் கழுத்தை வளைக்கிறார்கள். இதனால் கழுத்து மீது அழுத்தம் ஏற்படுகிறது, முதுகெலும்பு கோளாறு போன்றவை அதிகமாக வருகிறது.

 கவனம்:

கவனம்:

ஸ்மார்ட்போன்கள் எப்பொழுதும் சமூக ஊடகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள், சமூக நெட்வொர்க்குகள், மின்னஞ்சல்கள், முதலியவற்றிலிருந்து தொடர்ந்து அறிவிப்புகளைப் பெறுவது பொதுவானது. அடிக்கடி அறிவிப்புகள் உங்கள் கவனத்தை திசைதிருப்பும்.

முழங்கை:

முழங்கை:

நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் மிக அதிகமாகப் பயன்படுத்தும்போது, உங்கள் கைகளில் 'தசைநார்கள் அதிகப்பயன்பாடுகளுக்கு உகந்தவையாக இருக்கின்றன, இதனால் பல்வேறு பாதப்புகள் ஏற்ப்படும். இது செல்போன் எல்போ என்ற நிலைக்கு வழிவகுக்கிறது, இது நீண்ட காலமாக உங்கள் முழங்கை குனிய வைப்பதற்கு கடினமான ஒரு வியாதி எனக் கூறப்படுகிறது.

விரல்கள்:

விரல்கள்:

மிக அதிகமான ஸ்மார்ட்போன் பயன்பாடு தடைபட்ட விரல்கள், தசை வலி மற்றும் மணிக்கட்டு வலி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

Best Mobiles in India

English summary
10 health risks caused due to prolonged smartphone use : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X