ஆண்ட்ராய்டு காரங்களுக்கு ஆபத்து..!

By Meganathan

மீண்டும் வந்தது சைபர் செக்யூரிட்டி தொல்லை, இம்முறை ஹேக்கர்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தினை குறி வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், உலகம் முழுவதிலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தும் கோடி கணக்கானோரின் தகவல்களுக்கு ஆபத்து ஏற்ப்பட்டிருப்பதாக சைபர்செக்யூரிட்டி வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

"அய்யய்யோ"னு ஷாக் ஆகாமல் இது குறித்து 'சிம்பெரியம்' சைபர் பாதுகாப்பு நிறுவனம் வழங்கி இருக்கும் விரிவான தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

மொபைல் நம்பர்

மொபைல் நம்பர்

எம்எம்எஸ் மூலம் பிரத்யேக குறியீடுகளை குறுந்தகவலாக அனுப்பினால் போதும்.

நோட்டிபிகேஷன்

நோட்டிபிகேஷன்

ஹேக்கர்களின் சரியான தாக்குதலில் குறுந்தகவல் நீங்கள் படிக்கும் முன் அழிந்து விடும், உங்களால் நோட்டிபிகேஷன்களை மட்டும் தான் பார்க்க முடியும்.

கோடு

கோடு

"Stagefright" எனும் ஆண்ட்ராய்டு கோடு தான் இப்பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

வீடியோ
 

வீடியோ

ஹேக்கர்கள் கெடுதல் செய்யும் கோடுகளை வீடியோவில் மறைத்து பயனாளிகளிடையே பகிர்ந்து கொள்வர்.

பயன்

பயன்

பயனாளிகள் வீடியோக்களை பார்க்கவில்லை என்றாலும் மறைத்து வைக்கப்பட்ட கோடுகள் கட்டவிழ்த்து கொள்ளும்.

தாக்குதல்

தாக்குதல்

இந்த தாக்குதல் யாரும் குறிப்பிட்டு நடத்தப்பட மாட்டாது என்கின்றனர் சைபர் செக்யூரிட்டி வல்லுநர்கள்.

தகவல்கள்

தகவல்கள்

ஹேக்கர்கள் எழுதியிருக்கும் கோடுகள் பயனாளிகளின் தகவல்களை அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்த முடியும்.

சதவீதம்

சதவீதம்

ஸ்டேஜ்ஃப்ரைட் வைரஸ் 95 சதவீதம் அதாவது கிட்டத்தட்ட 950 மில்லியன் ஆண்ட்ராய்டு கருவிகளை தாக்கும் அபாயம் இருப்பது கூறப்படுகின்றது.

கூகுள்

கூகுள்

சிம்பெரியம் நிறுவனம் இது குறித்த தகவல்களை கூகுள் நிறுவனத்திடம் வழங்கி இருப்பதோடு கூகுள் நிறுவனமும் இப்பிரச்சனைளை சரி செய்ய துவங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவு

முடிவு

கூகுள் இப்பிரச்சனையில் தலையிட்டிருந்தாலும் இதை முழுமையாக செய்து முடிக்க ஹார்டுவேர் தயாரிப்பு மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் இணைந்தால் மட்டுமே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

 
Read more about:
English summary
Cyber security firm Zimperium has warned of a flaw in the world's most popular smartphone operating system that lets hackers take control with a text message.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X