ரூ.990க்கு பேட்டரியில் இயங்கும் புதிய ஸீப்ரானிக்ஸ் போர்ட்டபுள் ஸ்பீக்கர்

By Super
|
ரூ.990க்கு பேட்டரியில் இயங்கும் புதிய ஸீப்ரானிக்ஸ் போர்ட்டபுள் ஸ்பீக்கர்
இந்தியாவில் கணினி மற்றும் அது சார்ந்த பொருள்களின் வர்த்தகத்தில் முன்னனியில் இருக்கும் டாப் நோட்ச் இன்போட்ரோனிக்ஸ் சப்ஸ்டேஷன் லைட் போர்ட்டபுள் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஸீப்ரானிக்ஸ் பிராண்டு பெயரில் வந்துள்ள இந்த ஸ்பீக்கர்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் தரமான இசையை வழங்கக்கூடியவை. இந்த ஸ்பீக்கர்கள் அதி்ல் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகளைக் கொண்டு இயங்கும். இந்த பேட்டரிகள் மூலம் இடைவிடாத இசையை நாம் கேட்கலாம்.

இந்த ஸ்பீக்கர்களை எல்லாவிதமான ஆடியோ கெட்ஜட்டுகளிலும் பயன்படுத்தலாம். அதாவது இது எஸ்டி/எம்எம்சி கார்ட் மற்றும் யுஎஸ்பி ப்ளாஷ் போன்றவற்றிற்கான் போர்ட்களை கொண்டுள்ளன. மேலும் இது எம்பி3 மீயூசிக் பைல்களையும் கொண்டுள்ளன.

அதே போல் இதில் இன்பில்ட் எப்எம் ரேடியோவும் உள்ளது. மேலும் இது எப்எம் ரேடியோ ஸ்டேஷன்களை பதிவு செய்யும் வசதியும் கொண்டுள்ளன. இந்த ஸ்டேஷன்களை நமது வசதிக்கு ஏற்றார்போல் கஸ்டமைஸ் செய்ய முடியும்.

இதன் டிஸ்ப்ளேயில் எல்லா நாம் கேட்டுக் கொண்டிருக்கும் இசையின் எல்லா விதமான விவரங்களையும் அறிய முடியும். மேலும் இந்த டிவைஸை லேப்டாப், மொபைல்போன் போன்ற டிவைஸ்களோடு இணைக்கக் கூடிய சின்க்ரோனைஸ் செய்யும் எ/வி கேபிள் உள்ளது. இதன் கன்ட்ரோல் பட்டன்கள் யூசர் பிரண்ட்லியாக உள்ளன.

இந்த டிவைஸ் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வருகிறது. இதில் அதிர்வுகள் தரும் வைப்ரேசன் இருக்காது. இதன் யுஎஸ்பி கேபிளின் மூலம் இதன் பேட்டரிகளை ஜார்ஜ் செய்ய முடியும். மேலும் இதனுடைய 3.5எம்எம் ஸ்டீரியோ கேபிள் மூலம் எம்பி3 ப்ளேயர்கள் மற்றும் லேப்டாப்புகளில் இதை இணைக்க முடியும்.

மேலும் இதை நிறுத்தி வைக்க ஸ்டாண்டும் உள்ளதால் இதை எங்கு வேண்டுமானாலும் எளிதாக வைக்க முடியும். இது ஒரு போர்ட்டபுள் டிவைஸ் ஆகும். அதனால் இதை நமது கைபை, சூட்கேஸ் மற்றும் கார் போன்றவற்றில் எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.

இவற்றின் விலை மிக குறைவே. அதாவது ரூ.990க்கு இவற்றை வாங்கலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X