இணையதளம் மூலம் டிவி பார்க்கும் வசதியை வழங்கும் வெஸ்டர்ன் டிஜிட்டல்

By Super
|
இணையதளம் மூலம் டிவி பார்க்கும் வசதியை வழங்கும் வெஸ்டர்ன் டிஜிட்டல்
இணையம் அகன்ற வரிசை வேகத்தில் வந்த பின் நம்மால் இணையதளத்திலிருந்து பாடல்களையும் படங்களையும் பதிவிறக்கம் செய்து அவற்றை நமது டிவியில் பார்க்க முடிகிறது. புதிய டிவிகளில் வீடியோ கேம் விளையாடவும் வசதி உண்டு. ஆனால் வெஸ்டர்ன் டிஜிட்டல் (டபுள்யுடி) போன்ற நிறுவனங்கள் டிவியில் எச்டி தரத்துடன் இன்டர்நெட் மூலமாக டிவி பார்க்கும் வசதியை வழங்குகின்றன.

இசைப் பிரியர்களுக்கும் பொழுதுபோக்கை விரும்புவோருக்கும் இந்த காலம் சரியானதொரு காலம் என்று சொல்லலாம். ஏனெனில் வெஸ்டர்ன் டிஜிட்டல் மீடியா தனது புதிய சிந்தனையுடன் டிவி லைப் மீடியை ப்ளேயரை அறிமுகப்படுத்துகிறது. இந்த டிவியில் நாம் இணையதளத்தைப் பார்க்கலாம். அதனால் இனி வீட்டில் இருப்பது நமக்கு சலிப்பைத் தராது.

வெஸ்டர்ன் டிஜிட்டல் தனது டிவி வயர்லஸ் மீடியா ப்ளேயரை அப்டேட் செய்திருக்கிறது. இந்த டபுள்யுடி லைவ் டிவி மீடியா ப்ளேயர் 2001ல் அறிமுகப்படுத்தப்பட்ட பின் அதன் ஸ்போட்டிபை அப்ளிகேசன் மூலம் மிகப் பிரபலமானது. மேலும் இதில் இசை கேட்பது மிகச் சிறந்த அனுபவத்தைத் தந்தது.

இப்போது டபுள்யுடியின் யூசர் இன்டர்பேஸ் அப்க்ரேட் செய்யப்பட்டு அதன் மூலம் ஆன்லைன் வசதிகளான் ப்ளாக்பஸ்டர், ஹூலுப்ளஸ், டெய்ல மோஷன், நெட்பிளிக்ஸ் மற்றும் டிவி ஷோக்கள் ஆகியவற்றை டிவிக்கு அனுப்புகிறது. இந்த டபுள்யுடி டிவி எர்த்நெட் அல்லது வயர்லஸ் மூலம் இணையதளத்தோடு இணைக்க முடியும். இதன் 802.11என் வயர்லஸ் இணைப்பு 1080பி எச்டி வீடியோ ரிசலூசனை சப்போர்ட் செய்கிறது.

இந்த புதிய டபுள்யுடி டிவி லைவ் மீடியா ப்ளேயர் ஸ்போட்டிபை ப்ரீமியம் வாடிக்கையாளர்களுக்கு அளவில்லாத இசையை வழங்குகிறது. அதாவது அவர்கள் 15 மில்லியன் பாடல்களை கேட்க முடியும்.

தற்போது டபுள்யுடி டிவி லைவ் இந்தியாவில் ரூ.7999க்கு கிடைக்கிறது. அமெரிக்காவில் இது 99.99 டாலருக்குக் கிடைக்கிறது. நாம் இணையதளத்தை டிவியில் பார்க்க விரும்பினால் இந்த புதிய டடபுள்யுடி லைவ் டிவியை வாங்கலாம்.
மேலும் இது வாடிக்கையாளர்களை நன்றாக திருப்திப் படுத்தும் என நம்பலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X