நவீன தொழில்நுட்பத்துடன் ஓர் உயர்தர ஹெட்போன்!

By Karthikeyan
|
நவீன தொழில்நுட்பத்துடன் ஓர் உயர்தர ஹெட்போன்!

அல்ட்ராசோன் ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல ஹெட்போன் தயாரிக்கும் ஒரு நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனம் தற்போது அல்ட்ராசோன் சிக்னேச்சர் ப்ரோ என்ற புதிய ஹெட்போனைக் களமிறக்கி இருக்கிறது. இந்த ஹெட்போன் உயர்தரத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதாவது 40 மிமீ ஒலி அமைப்பிற்காக இந்த அல்ட்ராசோன் ஹெட்போனில் டைட்டானிம் தகடால் ஆன ட்ரான்ஸ்டியூசர் உள்ளது. மேலும் அல்ட்ராசோனின் பொறியாளர்களால் இந்த ஹெட்போன் வடிவைமைக்கப்ப்டுள்ளது. மேலும் இசைத் துறையின் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் இசை துறையினரின் கருத்துக்களையும் கேட்டு அதற்கு ஏற்ப இந்த ஹெட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் தரமான ஒலி அமைப்பிற்காக நிறைய ஒலி அமைக்கு பொறியாளர்கள் இணைந்து இந்த ஹெட்போனின் ஒலி அமைப்பை உருவாக்கி இருக்கின்றனர்.

இந்த அல்ட்ராசோன் டேப்லெட்டின் தொழில் நுட்பங்களைப் பார்க்கும் போது அவை அபாரமாக உள்ளது. இந்த ஹெட்போன் 8 ஹெர்ட்ஸ் முதல் 42 கிலோ ஹெர்ட்ஸ் வரையிலான ப்ரீக்வன்சியைக் கொண்டுள்ளது. இதன் இம்பீடன்ஸ் 32 ஓம்களாகும். இந்த ஹெட்போன் 98டிபி அழுத்தத்தைத் தாங்கக்கூடியது.

இந்த அல்ட்ராசோன் டேப்லெட் கண்டிப்பாக இசைப் பிரியர்களின் மனங்கவர் கள்வனாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இந்த ஹெட்போனில் எஸ்-லாஜி் தொழில் நுட்பம் உள்ளதால் இதன் ஒலி அமைப்பு மிக சூப்பராக இருக்கும்.

இந்த புதிய அல்ட்ராசோன் ஹெட்போனுக்கு முன்பே அல்டராசோன் எடிசன் 9 என்ற ஹெட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஹெட்போன்தான் வரும் புதிய ஹெட்போனுக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கிறது. மேலும் இந்த எடிசன் 9 ஹெட்போன் ஒரு வெற்றி பெற்ற சாதனம் ஆகும். இந்த ஹெட்போன்தான் மற்ற அல்ட்ராசோன் ப்ரோ ஹெட்போன்கள் வர காரணமாக இருக்கின்றன.

இந்த அல்ட்ராசோன் எடிசன் 9 ஹெட்போன் மிகவும் எடை குறைந்த ஹெட்போன் ஆகும். மேலும் இதன் எடை 300 கிராம் மட்டுமே. இதன் பி-லாக் கனக்சனில் தனியாக பிரித்து எடுக்கக்கூடிய கோர்டுகள் உள்ளன. இந்த கோர்டுகளில் உள்ள ஒன்றின் நீளம் 3மீ ஆகும். மேலும் இவை 6.3மிமீ நியூட்ரிக் ப்ளக்கைக் கொண்டுள்ளது. அடுத்த கோர்டு 1.5மீ அளவைக் கொண்டுள்ளது. இந்த கோர்டு 3.5மிமீ நியூட்ரிக் ப்ளக் கொண்டுள்ளது. இந்த நியூட்ரிக் ப்ளக்குகள் பொன் நிறத்தில் வருகின்றன.

இந்த அல்ட்ராசோன் ஹெட்போன்கள் மிகவும் தரம் வாய்ந்தவை. மற்றும் இவை அம்சமாக இசையை வழங்கும் சக்தி கொண்டவை. இந்த ஹெட்போன்கள் இப்போது அமெரிக்காவில் உள்ள பல முன்னனி கடைகளில் கிடைக்கின்றன. மற்ற நாடுகளில் உள்ளோர் ஆன்லைன் மூலமாக இதை வாங்க முடியும். இந்த ஹெட்போனின் விலை ரூ.64,000 ஆகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X