Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஏராளமான வசதிகளுடன் புதிய ஹோம்தியேட்டர்: சோனி அறிமுகம்

Updated: Wednesday, July 18, 2012, 16:34 [IST]

sony unveils 3d blu ray home theatre system for rs 40000

சோனி இந்தியா சமீபத்தில் ஒரு புதிய 3டி ப்ளூ-ரே ஹோம் தியேட்டரி சிஸ்டத்தைக் களமிறக்கி இருக்கிறது. இந்த ஹோம் தியேட்டருக்கு பிடிவி-என்990டபுள்யு என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

சோனியின் இசைப் பேழைகள் எப்போதுமே தரத்திலும் மற்றும் செயல்திறனுலும் பட்டையைக் கிளப்பும். அந்த வகையில் இந்த புதிய சோனியன் ஹோம் தியேட்டரும் சூப்பரான பல தொழில் நுட்பங்களைக் கொண்டு வருகிறது.

குறிப்பாக இந்த ஹோம் தியேட்டரிலும் சோனியின் எஸ்-மாஸ்டர் முழு டிஜிட்டல் ஆம்ப்ளிபயர் உள்ளதால் இது 3டி சரவுண்ட் தொழில் நுட்பத்தையும் அதே நேரத்தில் 3டி ஒலியையும் வழங்கும்.

அதுபோல் இதில் இருக்கும் 5.1 ஆடியோ சிஸ்டம், சேட்டிலைட் ஸ்பீக்கர்கள் மற்றும் சூப்பரான மேக்னடிக் ப்ளூயிட் ஸ்பீக்கர்கள் போன்றவற்றை வழங்குகின்றன. அதனால் இந்த ஹோம் தியேட்டரில் இரைச்சல் இருக்காது. ஆனால் இது வழங்கும் சத்தம் மிகத் தெளிவாக அதே நேரத்தில் அதிரடியாக இருக்கும்.

இந்த ஹோம் தியேட்டிரில் வரும் 4 ஸ்பீக்கர்களைத் தரையில் நிறுத்தி வைக்கலாம். இந்த ஸ்பீக்கர்கள் 1000 வாடஸ் ஆர்எம்எஸ்ஸை வழங்குகின்றன. மேலும் இந்த சோனி தியேட்டரில் வைபை, 2 எச்டிஎம்ஐ போர்ட்டுகள், யுஎஸ்பி போர்ட்டுகள் மற்றும் தரச்சான்று பெற்ற டிஎல்என்எ போன்றவையும் உள்ளன.

சோனி டேப்லெட்டுகளை வைத்திருப்போர் இந்த புதிய ஹோம் தியேட்டரில் தங்களது டேப்லெட் மற்றும் மொபைல்களை இணைத்து சூப்பராக பாடல்களைக் கேட்கலாம். மேலும் இந்த ஹோம் தியேட்டர் ரிமோட் வசதியும் கொண்டிருக்கிறது.

இந்த சோனி ஹோம் தியேட்டரை ரூ.40,000க்கு வாங்கலாம். அதே நேரத்தில் Flipkart.com மூலம் ரூ.39,000க்கு வாங்கலாம்.

Story first published:  Wednesday, July 18, 2012, 16:34 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll