தரமான இசைக்கு புதிய சோனஸ் சாப்ட்வேர்!

By Super
|

தரமான இசைக்கு புதிய சோனஸ் சாப்ட்வேர்!
சோனிக் வயர்லஸ் ஹைஃபை மியூசிக் சிஸ்டத்தின் இசை தரத்தை உயர்த்துவதற்காக புதிய சாப்ட்வேரை அறிமுகப்படுத்துகிறது சோனஸ் நிறுவனம். சோனஸ் சிஸ்டம் சாப்ட்வேர் 3.6 என்ற பெயரில் இது வருகிறது.

இந்த புதிய சோனஸ் சாப்ட்வேர் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. சோனிக் ஹைஃபை சிஸ்டத்தில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினாலே இந்த புதிய எளிதாக அப்டேட் செய்து கொள்ளலாம்.

ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்காக சோனஸ் ஆன்ட்ராய்டு கன்ட்ரோலர் சாப்ட்வேரையும் வழங்குகிறது. இதன் மூலம் ஹைபை மியூசிக் சிஸ்டத்தை எந்தவொரு ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் அல்லது ஸ்மார்ட்போன்கள் மூலம் வயர்லெஸ் மூலம் இணைக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும்.

ஆன்ட்ராய்டு 2.2 அல்லது அதைவிட உயர்ந்த வெர்சனில் இயங்கும் டேப்லெட்டுகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக அமேசான் கின்டில் பயர், சாம்சங் கேலக்ஸி டேப், மோட்டோரோலா சூம் மற்றும் எச்டிசி ப்ளையர் போன்ற டேப்லெட்டுகள் இதில் அடங்கும்.

மற்ற அப்டேட்டுகளைப் பார்த்தால் இந்த சோனஸ் 3.6டன் மியூசிக் லைப்ரரி மேனெஜ்மென்ட், ஸ்மார்ட்போன்கள் மற்றும் அலார்ம்களுக்கான ஆன்ட்ராய்டு ட்விட்டர் சப்போர்ட் ஆகியவையும் இணைக்கப்படுகின்றன. மேலும் அமெரிக்க மற்றும் கனடா நாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஸ்லாக்கர் ரேடியோ மியூசிக் சேவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் வாடிக்கையாளர்கள் ஆயிரக்கனக்கான பாடல்களிலிருந்து தங்களது கஸ்டம் ஸ்டேசன்களை உருவாக்க முடியும். அதுபோல் இந்த ரேடியோ சேவையில் கலைஞர்களின் வரலாறுகளை வாசிக்கவும் முடியும் மற்றும் கேட்க முடியும்.

ஸ்லாக்கர் ரேடியோ ப்ளஸ் அல்லது ஸலாக்கர் ப்ரீமியம் ரேடியோ இவற்றில் ஒன்று இருந்தால் இந்த சோனசில் இலவசமாக ரேடியோ அனுபவத்தைப் பெறுமுடியும். அதுபோல் இந்த ஸ்லாக்கர் ப்ரீமியம் ரேடியோ கணக்கிட முடியாத பாடல்களையும், கலைஞர்களைப் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது.

சோனஸ் 3.6 சாப்ட்வேர், சோனஸ் லேப்ஸ் என்று அழைக்கப்படுகின்ற பீட்டா என்விரான்மென்டை அறிமுகம் செய்கிறது. மேலும் இந்த சோனஸ் சாப்ட்வேரை நாம் அப்டேட் செய்யும் முன் பலமுறை நாம் பரிசோதிக்கும் வசதியையும் வழங்குகிறது.

மேலும் இந்த சோனஸ் 3.6 சாப்ட்வேரில் ஸ்போட்டிபையும் இணைக்கப்படுகிறது. இந்த சோனஸ் ஸ்போட்டிபையில் சைன் அப் செய்துவிட்டால் நமது சோனஸ் வயர்லஸ் சிஸ்டத்தில் இன்பாக்ஸை உருவாக்க முடியும். அதுபோல் சோனஸ் 3.6 எஎசி+ கோடக் சப்போர்ட்டையும் வழங்குகிறது.

சோனஸ் இன்கின் தலைவர் மற்றும் சீஇஒ ஜான் மெக்பார்லன் கூறும்போது இந்த புதிய சாப்டேவேரை அப்டேட் செய்வதன் நோக்கம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தரமான இசை அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதாகும்," என்றார்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X