Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பிலிப்ஸ் வழங்கும் அட்டகாசமான ஹெட்போன்கள்!

Updated: Wednesday, July 11, 2012, 11:28 [IST]

philips launches citiscape headphones
இந்தியாவில் பிலிப்ஸ் நிறுவனத்தின் இசைப் பேழைகளுக்கு எப்போதுமே அமோக வரவேற்பு உண்டு. அந்த வகையில் இப்போது சிட்டிஸ்கேப் என்ற புதிய ஹெட்போன்களை சமீபத்தில் களமிறக்கி இருக்கிறது பிலிப்ஸ். படு ஸ்டைலாக வரும் இந்த ஹெட்போன்கள் சூப்பரான செயல் திறனுடன் வருகின்றன.

இந்த ஹெட்போன்களில் பிலிப்ஸ் தனது மியூசிக் சீல் தொழில் நுட்பத்தை வைத்திருக்கிறது. அதனால் இந்த ஹெட்போன்களில் இசை மற்றும் ஒலி ஆகியவை மிகத் துல்லியமாக இருக்கும். அதோடு வெளிப்புறத்தில் இருந்து வரும் இரைச்சலும் இவற்றில் கேட்காது.

இந்த ஹெட்போன்களில் செயின்ட் ஜெர்மெய்ன் என்று அழைக்கப்படும் ஹெட்போன் மாநகரகங்களில் வாழும் நவீன கலாச்சாரம் கொண்ட மக்களைக் குறிவைத்து தயாரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பலமான இரைச்சல் மிகுந்த பகுதியில் இந்த ஹெட்போனில் இசை கேட்டாலும் அந்த இரைச்சல் இந்த ஹெட்போனுக்குள் நுழைய முடியாது.

இந்த ஹெட்போன்களில் இசை கேட்டுக் கொண்டிருக்கும் போது வரும் அழைப்புகளையும் எடுக்க முடியும். இந்த ஹெட்போன்கள் காதுகள் முழுவதையும் மறைத்துக் கொள்ளும். அதுபோல் கீழே விழாது.

இந்த ஹெட்போன்களில் அப்டவுன் ஹெட்போன்கள் ரூ.7500க்கும், டவுன்டவுன் ஹெட்போன்கள் ரூ.5000க்கும் விற்கப்படுகின்றன. அதுபோல் செயின்ட் ஜெர்மெய்ன் மற்றும் ஷிபுயா போன்ற ஹெட்போன்கள் ரூ.4000க்கு விற்கப்படுகின்றன.

Story first published:  Wednesday, July 11, 2012, 11:28 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll