புகைப்படக் கருவி வடிவத்தில் புதிய ஸ்பீக்கர் சிஸ்டம்

By Super
|
புகைப்படக் கருவி வடிவத்தில் புதிய ஸ்பீக்கர் சிஸ்டம்
புதுமைக்கானத் தாகம் எல்லோரிடமும் உண்டு. குறிப்பாக புதுமையை விரும்புவோரின் கண்களுக்கு புதியவை எல்லாமே மிகவும் கவர்ச்சியாகத் தெரியும். குறிப்பாக ஒரு சிலர் கப்பல்கள், கார்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்கள் மீது அதிகம் விருப்பம் கொண்டிருப்பர். ஒரு சிலர் உலக அதிசயங்களான பிரமீடுகள் மற்றும் ஈபிள் கோபுரம் போன்றவற்றின் மீது ஆர்வம் கொண்டிருப்பர்.

குறிப்பாக ஆட்டோமொபைல்ஸ் மற்றும் மின்னனு பொருள்களைத் தயாரிப்பவர்கள் மக்களின் இந்த ஆர்வத்தை உணர்ந்து தமது வர்த்தக உத்தியைப் பயன்படுத்தி புதுயுடன் கூடிய தமது தயாரிப்புகளை மக்களுக்கு வழங்குகின்றனர். அந்த விதத்தில் பார்த்தால் நிக்கோன் நிறுவனம் புகைப்பட கருவியைப் போலத் தோற்றம் அளிக்கும் ஒரு வித்தியாசமான ஸ்பீக்கரை தயாரித்து வழங்கவிருக்கிறது.

இந்த புதிய ஸ்பீக்கருக்கு நிக்கோன் லென்ஸ் ஸ்பீக்கர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கர் 52-200 மிமீ லென்ஸ் போல தோன்றினாலும் இது ஒரு லென்சோ அல்லது ஒரு புகைப்படக் கருவியோ கிடையாது. பார்க்க புகைப்பட கருவி போன்று இருந்தாலும் இது புதுமையான ஸ்பீக்கர் சிஸ்டம்.

இந்த கனிணி மற்றும் ஸ்மார்ட்போன் போன்றவற்றில் ஸ்டீரியோ 3.5எம்எம் ஆடியோ ஜாக் மூலம் வரும் இதை இணைத்துக்கொள்ள முடியும். இந்த நிக்கோன் லென்ஸ் பீக்கர் ஒரு போர்ட்டபுள் ஸ்பீக்கர் ஆகும். பார்ப்பதற்கும் மிக பிரமாதமாக இருக்கிறது. இதே உன்னிப்பாக கவனித்தால்தான் இது லென்ஸ் இல்லை என்பது நமக்கு தெரியும்.

இதன் கட்டுப்பாட்டுப் பட்டன் இதன் குழாயில் உள்ளது. இந்த கட்டுப்பாட்டுப் பட்டன் எல்லாவிதமான செயல்களையும் குறிப்பாக ஆடியோ ட்ராக்கை ஸ்கிப்பிங் செய்தல், நிறுத்துதல், மற்றும் பாஸ் செய்தல் போன்ற அத்தனை செயல்பாட்டையும் இந்த டிவைஸ் செய்யும்.

இதில் லித்தியம் பேட்டரி இன்பில்டாக உள்ளது. இந்த ரீஜார்ஜபுள் பேட்டரி 4 மணி நேரம் வரை பேக்கப்பை கொடுக்கும் திறனைக் கொண்டது. மேலும் இது மைக்ரோஎஸ்டி கார்ட் ஸ்லாட் மற்றும் யுஎஸ்பி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் இதை ஜார்ஜ் செய்வது மிக எளிது. இதன் விலை ரூ.1000 முதல் 2000 வரையில் இருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X