கிளிப்ச் வழங்கும் அட்டகாசமான ஹெட்போன்கள்!

By Karthikeyan
|
கிளிப்ச் வழங்கும் அட்டகாசமான ஹெட்போன்கள்!

கிளிப்ச் நிறுவனம் வரைவில் சூப்பரான இன்-இயர் ஹெட்போன்களைக் களமிறக்க இருக்கிறது. இந்த ஹெட்போன்கள் எஸ்4 மற்றும் எக்ஸ்7 வரிசைகளில் வருகின்றன. எஸ்4 வரிசையில் எஸ் 4(II), எஸ்4ஐ (II) மற்றும் எஸ்4எ (II) போன்ற ஹெட்போன்கள் வருகின்றன. இந்த மூன்று ஹெட்போன்கள், இன்லைன் ரிமோட் மற்றும் மைக் ஆகிய வசதிகளுடன் வருகின்றன. மேலும் ஐஒஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் இந்த ஹெட்போன்களை மிக எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.

எஸ் 4(II) ஹெட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் வருகிறது. இந்த ஹெட்போனில் வெளிப்புறத்திலிருந்து வரும் சத்தங்கள் உள்ளே கேட்காது. அதோடு இந்த ஹெட்போன்கள் காதுகளில் கச்சிதமாக பொருந்தி நிற்கும். அதோடு இந்த ஹெட்போனில் பேஸ் இசை மிக அம்சமாக இருக்கும்.

எஸ்4ஐ (II) ஹெட்போனை எடுத்துக் கொண்டால், இது கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் வருகிறது. ஆப்பிள் சாதனங்களில் இந்த ஹெட்போன்களை மிக அழகாக இணைத்துக் கொள்ள முடியும். அதோடு இதில் இசையை அருமையாகக் கேட்க முடியும். அதே நேரத்தில் வரும் அழைப்புகளை எடுக்க முடியும். மேலும் அழைப்புகளையும் விடுக்க முடியும்.

எஸ்4எ (II) ஹெட்போன் ஆன்ட்ராய்டு சாதனங்களுக்காகவே வருகிறது. இந்த ஹெட்போன் பட்டன் ரிமோட் மற்றும் மைக்குடன் வருகிறது. இந்த ஹெட்போனில் மிக அழகாக அழைப்புகளை விடுக்கலாம். மேலும் வரும் அழைப்புகளையும் விடுக்க முடியும்.

இறுதியாக எக்ஸ்7ஐ ஹெட்போன்கள் மிக அருமையான பேஸ் இசையை வழங்குகின்றன. இந்த ஹெட்போன்கள் மிக உறுதியாக இருக்கின்றன.

விலையைப் பொருத்த மட்டில் எஸ் 4(II) ஹெட்போன் ரூ.4,000க்கும் எஸ்4ஐ (II) மற்றும் எஸ்4எ (II) போன்ற ஹெட்போன்கள் ரூ.5,500க்கும் விற்கப்பட இருக்கின்றன. அதுபோல் உயர்தரத்தில் வரும் எக்ஸ்7ஐ ஹெட்போன்கள் ரூ.10,000க்கு வர இருக்கின்றன.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X