Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

வாட்டர் ப்ரூப் வசதியுடன் புதிய ஹெட்போன்!

Updated: Sunday, July 15, 2012, 9:38 [IST]

klipsch s4i rugged in ear headphones

கிளிப்ச் நிறுவனம் தற்போது ஒரு புதிய ஹெட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஹெட்போனிற்கு கிளிப்ச் இமேஜ் எஸ்4ஐ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த ஹெட்போனின் சிறப்பு என்னவென்றால் இது தண்ணீர் தடுப்பு வசதி கொண்டது. அதாவது இந்த ஹெட்போனில் தண்ணீர் பட்டாலும் இது பாதிப்பு அடையாது.

இந்த ஹெட்போனை காதிற்குள் அணிந்து கொள்ளலாம். குறிப்பாக இது சூப்பரான இசையை வாரி வழங்கும். இந்த ஹெட்போன் டூவல் மேக்னட் ட்ரைவர்களைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இதில் ஒரு இன்லைன் ரிமோட் அல்லது மைக்கும் உண்டு.

இந்த கிளிப்ச் ஹெட்போன் சூப்பரான ஸ்டைலில் வருகிறது. இதன் இயர் பட்சுகள் இரப்பரால் ஆனவை. அதனால் இது தண்ணீரால் பாதிப்பு அடையாது. இந்த ஹெட்போனை ஆப்பிளின் ஐபோனில் மிக அழகாக பொருத்திக் கொள்ளலாம்.

அதன் மூலம் அருமையாக பாடல்களைக் கேட்கலாம். அதோடு வரும் அழைப்புகளையும் எளிதாக எடுக்கலாம். மேலும் இந்த ஹெட்போன் வெளிப்புறத்திலிருந்து வரும் சத்தத்தை தடுக்கும் வசதி கொண்டிருப்பதால் எந்தவித தொந்தரவும் இல்லாமல் இசை மழையில் நனையலாம்.

இந்த கிளிப்ச் ஹெட்போன் ஊதா, மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் இந்த ஹெட்போனை பெரிதும் விரும்புவார்கள் என்று நம்பலாம். இந்த ஹெட்போன் ரூ.5000க்கு விற்கப்படுகிறது.

Story first published:  Sunday, July 15, 2012, 9:38 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll