சூப்பர் பவர் கொண்ட ஜேவிசியின் நவீன வீடியோ கேமரா!

By Karthikeyan
|
சூப்பர் பவர் கொண்ட ஜேவிசியின் நவீன வீடியோ கேமரா!

எதிர்பாரத நேரங்களில் புதுமையான கேமராக்கள் அறிமுகமாவதுண்டு. அப்படிப்பட்ட கேமராக்களில் ஒரு சில பெரிய வெற்றியைக் குவிக்கின்றன. முழு எச்டி வீடியோ ரிக்கார்டிங் வசதி கொண்ட கேமராக்கள் வீடியோ ரிக்கார்டிங்கிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றன. ஆனால் கேமரா சந்தையில் ஒரு பெரிய போட்டியே நிலவுகிறது. மேலும் ஏராளமான 1080பி வீடியோ ரிக்கார்டிங் வசதி கொண்ட கேமராக்கள் களமிறங்குகின்றன.

நிறைய பேர் உயர்தர கேமராக்களை விட உயர்தர காம்கோர்டரை விரும்புகின்றனர். ஏனெனில் இந்த காம்கோர்டர் சூப்பராக வீடியோவை ரிக்கார்ட் செய்யும். 2கே காம்கோர்டர்கள் மிகவும் பிரபலமானவை. இந்த 2கே காம்கோர்டர்களை வீழத்த புதிய டிவைஸ் வர முடியாது என்று பலர் நினைத்தனர். ஆனால் அந்த நினைப்பு இப்போது விரைவில் பொய்யாகப் போகிறது.

ஆம். இந்த வருடம் லாஸ் வேகாசில் நடந்த நகர்வோர் கண்காட்சியில் தொழில் நுட்பம் மற்றும் காம்கோர்டர்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஜேவிசி நிறுவனம் தனது புதிய ஜேவிசி ஜிஒய்-எச்எம்க்யு10 என்ற கேமராவை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய கேமராதான் உலகிலேயே முதல் 4கே காம்கோர்டர் ஆகும். அதுபோல் இதன் விலையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

4கே வீடியோக்கள் 1080பி வீடியோக்களுக்கு இணையாக இருக்கும். இவற்றின் பிக்சல் ரிசலூசன் 1080பி வீடியோக்களை விட 4 மடங்கு அதிகமாக இருக்கும். அதாவது 4கே வீடியோக்களின் பிக்சல் ரிசலூசன் 3840 x 2160 ஆக இருக்கும். 4கே வீடியோ ரிக்கார்டிங் கூலஸ்ட் வசதியைக் கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த ஜேவிசி ஜிஒய்-எச்எம்க்யு10 கேமரா 1080ஐ மற்றும் 1080பி எச்டி வீடியோ ரிக்கார்டிங்கை சப்போர்ட் செய்கிறது. லைவ் 4கே மானிட்டரிங் மற்றும் ப்ரொஜெக்சன் போன்றவை ஜேவிசியின் பால்கான்பேர்ட் எல்எஸ்ஐ சிப் ஆகும். எஸ்டிஎச்சி அல்லது எஸ்டிஎக்ஸ்சி மெமரி கார்டுகள் மூலம் இந்த கேமராவில் 144 எம்பிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு எவிசிஎச்டி வீடியோவை ரிக்கார்ட் செய்ய முடியும்.

இந்த 4கே வீடியோக்களைப் பெறுவது கடினமாகத் தோன்றலாம். ஆனால் மிகவும் எளிது என்கிறது ஜேவிசி நிறுவனம். அதாவது ஜேவிசியின் படி 4கே படங்களை எச்டி ரிசலூசனில் பெறுவது மிகவும் எளிதாகும். அதாவது காம்கார்டரின் திரை மூலமாக இதைப் பெறமுடியும்.

திரையைப் பொறுத்த மட்டில் ஜேவிசி ஜிஒய்-எச்எம்க்யு10 கேமரா 3.5 இன்ச் அளவில் எல்சிடி தொடு திரையைக் கொண்டுள்ளது. எப்போதுமே 4கே வீடியோ ரிக்கார்ட் செய்வதற்கு ப்ராசஸிங் திறன் தடையாக இருக்கும். ஆனால் ஜேவிசி தனது 4கே காம்கோர்டர் மூலம் இந்த தடையை எளிதாக நீக்கி விடுகிறது.

இரண்டு சமமான எக்ஸ்எல்ஆர் ஜாக்குகள், மேனுவல் ஆடியோ லெவல் கண்ட்ரோல்கள் மற்றும் இன்பில்ட் ஸ்டீரியோ மைக்ரோபோன் போன்றவை இந்த கேமராவின் இதர அம்சங்களாகும். இந்த கேமரா மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் இது ரூ.2,60,000க்கு விற்கப்படும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X