Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இன்டக்ஸ் வழங்கும் வெப்காம் மற்றும் ஸ்பீக்கர்கள்!

Updated: Saturday, June 2, 2012, 12:16 [IST]

intex launches hd webcam and portable speakers

இன்டக்ஸ் நிறுவனம் புதிய உயர்தர வீடியோ மற்றும் ஆடியோ சாதனங்களைக் களமிறக்க இருக்கிறது. அதாவது சூப்பரான வீடியோ அனுபவத்தை வழங்கும் ஒரு எச்டி வெப்காமையும், இனிமையான இசையை வழங்கும் புதிய ஆடியோ ஸ்பீக்கர்களையும் வழங்க இருக்கிறது.

இன்டக்ஸ் எச்டி வெப்காம் டிஆர்யு-வியு-எச்டி 720 மற்றும் என்டக்ஸ் ஜாய்ன் இட் யுஎஸ்பி ஸ்பீக்கர் (ஐடி-370) போன்ற பெயர்கள் இந்த சாதனங்களுக்கு சூட்டப்பட்டிருக்கின்றன.

இன்டக்ஸ் வெப்காம் 720பி எச்டி வீடியோவையும் அதே நேரத்தில் 16 எம்பி ஸநாப்பரையும் சப்போர்ட் செய்கிறது. மேலும் இது இமேஜ் கம்ப்ரசன் வசதி கொண்டு வருவதால் இதில் எளிதாக படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து அதை அனுப்பவும் முடியும். அதோடு இந்த வெப்காமில் மைக்ரோபோன், சிஎம்ஒஎஸ் கலர் சென்சார், யுஎஸ்பி, நெகிழ்வு தன்மை கொண்ட லென்ஸ் மற்றும் பேஸ் ட்ராக்கிங் வசதி ஆகியவையும் உள்ளன.

அதே நேரத்தில் என்டக்ஸ் ஸ்பீக்கர் ஒரு மினி சவுண்ட்பாரைப் போல செயல்படுகின்றது. இந்த ஸ்பீக்கர் ஸ்டீரிய ஒலி அமைப்புடன் வருகிறது. யுஎஸ்பி ஸ்லாட் கொண்டிருப்பதால் இந்த ஸ்பீக்கரை லேப்டாப்புகள், கணினிகள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் பிஎம்பிகள் போன்றவற்றோடு மிக எளிதாக இணைக்க முடியும்.

இன்டக்ஸ் வெப்காம் ரூ.1740க்கும் ஸ்பீக்கர் ரூ.400க்கும் விற்கப்படுகிறது. இந்த இரண்டு சாதனங்களுமே  1 வருட உத்திரவாதத்துடன் வருகிறது.

Story first published:  Saturday, June 2, 2012, 12:16 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll