கார்களுக்கான புதிய ப்ளூடூத் ஆடியோ சிஸ்டத்தை வழங்கும் எச்டிசி!

By Karthikeyan
|
கார்களுக்கான புதிய ப்ளூடூத் ஆடியோ சிஸ்டத்தை வழங்கும் எச்டிசி!

பயணத்தின் போது இசை கேட்பது என்பது ஒரு இனிமையான அனுபவம் ஆகும். அது பயணக் களைப்பை மறக்கச் செய்கிறது. அப்படிப்பட்ட இசையை வழங்க எச்டிசி ஒரு புதிய ப்ளூடூத் கார் ஆடியோ சிஸ்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த எச்டிசி ப்ளூடூத் ஆடியோ சிஸ்டம் ஒரு சிறிய சாதனம் ஆகும். இது ஒரு சிறிய போர்ட்டைக் கொண்டிருக்கிறது. இந்த ப்ளூடூத் ஆடியோவோடு எந்த ஒரு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனையும் மிக எளிதாக இணைக்க முடியும். மேலும் இந்த சாதனம் 3.5 எம்எம் ஜாக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் காரில் உள்ள கார் ஸ்டீரியோ சிஸ்டத்தோடு இந்த சாதனத்தை இணைக்க முடியும்.

இந்த ப்ளூடூத் கார் ஆடியோ சிஸ்டத்தின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இந்த சாதனம் மிகவும் அடக்கமான ஒன்றாகும். காரை ஓட்டிச் செல்லும் போது இது பாதுகாப்பாக இருக்கும். மேலும் இது ஆடியோ ஒலி கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. இதில் ஒரு எல்சிடி திரையும் உண்டு. மேலும் இதில் இரைச்சல் இருக்காது. மேலும் இந்த சாதனம் சூப்பரான யூசர் இன்டர்பேசைக் கொண்டுள்ளது. மேலும் காரில் உள்ள ஸ்பிக்கர்களோடு இந்த சாதனத்தை மிக எளிமையாக இணைக்க முடியும். இதன் ஆடியோ மிகத் தரமாக இருக்கும்.

இந்த எச்டிசி ப்ளூடூத் ஆடியோவை இயக்குவது மிகவும் எளிதாக இருக்கும். இந்த சாதனத்தை காரின் ஸ்டீரியோ சிஸ்ட்த்தோடு இணைத்தால் போதுமானது. ஆனால் இதன் ஒலி ஐபோன் மூலம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். கண்டிப்பாக இந்த ப்ளூடூத் ஆடியோ சிஸ்டம் இசைப் பிரியர்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் இந்த ப்ளூடூத் ஆடியோ விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X