இயற்கையின் தோழனாகும் மெர்லியின் ஆடியோ படைப்புகள்

By Super
|
இயற்கையின் தோழனாகும் மெர்லியின் ஆடியோ படைப்புகள்
மர்லி நிறுவனத்திற்கு அதன் தரமான தயாரிப்புகள் மூலம் ஒரு சிறந்த பெயர் உண்டு. குறிப்பாக மர்லியின் தயாரிப்புகளின் வெற்றிக்குக் காரணம் அதன் தரம் ஆகியவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கிறது. குறிப்பாக தரத்தைப் பொறுத்தவரை அவர்கள் விட்டுக் கொடுத்ததே இல்லை.

அதுபோல் சுற்றுச்சூழலுக்கு உகந்த அவர்களின் படைப்புகள் மற்ற தயாரிப்பாளர்களுக்கு ஒரு பாடமாக இருக்கிறது. குறிப்பாக மீண்டும் பயன்படக்கூடிய ப்ளாஸ்டிக் மற்றும் மரங்களால் தனது படைப்புகளைத் தயாரிக்கிறது.குறிப்பாக தற்போது மர்லி இயற்கை சார்ந்த ஹெட்போன்கள், இயர்போன்கள், டோக்குகள் மற்றும் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த தயாரிப்புகளுக்காக அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் மிகவும் இயற்கை சார்ந்ததாகும். அதன் மூலம் அவர்கள் உலகத்திறக்கு அன்பையும் அமைதியையும் கொடுக்க விழைகின்றனர். மேலும் சமத்துவத்தையும் அவர்கள் உலகிற்கு அறிவிக்கின்றனர். அதுவே அவர்களின் கனவாகும்.

மர்லியின் கலக்க்ஷன் 3 வடிவங்களில் வருகின்றன. குறிப்பாக அதன் பெயர்கள் ஜமின் கலக்க்ஷன், ப்ரீடம் கலக்க்ஷன் மற்றும் டெஸ்டினி கலக்க்ஷன் என்று வருகின்றன. இந்த தயாரிப்புகள் தரமான ஒலி அமைப்புடன் வருகின்றன. மேலும் அவை சியோன், ரிவலூசன், ஸ்டர் இட் அப் மற்றும் பீப்பிள் கெட் ரெடி போன்ற செய்திகளைத் தாங்கி வருகிறது.

ஜமின் கலக்க்ஷன் இளையோரை குறி வைத்து வருகிறது. இளைஞர்களைக் கவரும் அற்புதமான நிறத்தில் வருகிறது. மேலும் இதில் பருத்தி துணி உள்ளது. இந்த ஜமின் ரூ.1200லிருந்து ரூ.3600 வரை கிடைக்கும். ஜமின் ஸ்பீக்கர்கள் ரூ.2000லிருந்து ரூ.12000 வரை கிடைக்கும்.

ப்ரீடம் கலக்க்ஷனின் விலையைப் பார்த்தால் அது ரூ.3200லிருந்து ரூ.8000 வரை கிடைக்கும். அதே நேரத்தில் அதன் ஸ்பீக்கர்கள் ரூ.12000க்கு கிடைக்கும். டெஸ்ட்டின் கலக்க்ஷனை எடுத்துக் கொண்டால் அது மிகத் தரமாக வருகிறது. அதன் ஒலி அமைப்பு மிகத் துல்லியமாக இருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X