அட.. அங்கேயும் பாட்டுக் கேட்க முடியுமா!?

By Super
|
அட.. அங்கேயும் பாட்டுக் கேட்க முடியுமா!?

நீச்சல் அடித்துக் கொண்டே பாடல் கேட்க முடியுமா? முடியும் என்கிறது ஃபினிஸ் நிறுவனம். ஆம், ஃபினிஸ் நிறுவனம் புதிய வாட்டர் ப்ரூப் கொண்ட ஸ்விஎம்பி3 என்ற 2ஜி ப்ளேயரை அறிமுகப்படுத்துகிறது.

ஃபினிஸ் நிறுவனம் உயர் தர ஹெட் போன்களை வழங்குவதில் முன்னனியில் இருக்கிறது. தற்போது நமது கற்பனைக்கும் எட்டாத வகையில் ஸ்விஎம்பி3 என்ற 2ஜி வாட்டர் ப்ரூப் எம்பி3 ப்ளேயரை அறிமுகப்படுத்துகிறது. இதன் சிறப்பு என்னவென்றால் தண்ணீரில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தாலும் இதை அணி்ந்துகொண்டு பாடல் கேட்கலாம்.

இந்த ப்ளேயரில் போன் கன்டக்சன் ஆடியோ ட்ரான்ஸ்மிசன் என்ற தொழில்நுட்பம் உள்ளதால் வாட்டர் ப்ரூப் ஹெட்போன்களில் உள்ள அத்தனை பிரச்சினைகளையும் இது தீர்த்துவிடும். அதே போல் நீருக்குள் இருந்தாலும் இது துல்லியமான இசையை வழங்கும்.

இது 2 ஜிபி மெமரி வசதியை கொண்டிருக்கிறது. எனவே, இதில் 500 பாடல்களை இதில் சேமித்து வைக்க முடியும். அதுபோல் இந்த டிவைஸில் தொடர்ந்து 30 மணி நேரம் பாடல் கேட்க முடியும். மேலும் இந்த 2ஜி வாட்டர் ப்ரூப் எம்பி3 ப்ளேயர் ஹைட்ரோடைனமிக் கிளிப்புகளைக் கொண்டிருப்பதால் காதுகளில் மிக அருமையாகப் பொருத்த முடியும்.

2ஜி வாட்டர் ப்ரூப் எம்பி3 ப்ளேயர் ஒரு யுஎஸ்பி பிளக்கை கொண்டிருக்கிறது. எனவே, இந்த யுஎஸ்பி மூலம் நாம் பதிவிறக்கம் மற்றும் சார்ஜ் செய்ய முடியும். இது லித்தியம்-ஐயன் பேட்டரி கொண்டிருப்பதால் இந்த பேட்டரியும் நீண்ட பேக்கப் மற்றும் நீடித்து உழைக்கும்.

மற்ற வாட்டர்ப்ரூப் ஹெட்போன்கள் நீருக்கடியில் அவ்வளவு தரமான இசையை வழங்குவதில்லை. ஆனால், இது மிகத் துல்லியமான இசையை வழங்குவதோடு, எடுத்துச் செல்வதும் மிக எளிதாக இருக்கும். இந்த 2ஜி வாட்டர் ப்ரூப் எம்பி3 ப்ளேயரின் விலை ரூ.8,500 ஆகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X