கிறங்கடிக்கும் ஜெனிலேக்கின் போர்ட்டபுள் ஸ்பீக்கர் சிஸ்டம்

By Super
|
கிறங்கடிக்கும் ஜெனிலேக்கின் போர்ட்டபுள் ஸ்பீக்கர் சிஸ்டம்
எல்லா வசதிகளையும் கொண்டு டிவி மற்றும் கணனிகளோடு இணைக்கக்கூடிய ஸ்பீக்கர் சிஸ்டம் உண்மயாகவே சிறந்ததாக இருக்கும். அப்படிப்பட்ட ஸ்பீக்கர் சிஸ்டத்தை அனைவரும் விரும்புவர். அதே நேரத்தில் அதில் பாடல் கேட்பதோ அல்லது படம் பார்ப்பதோ சிறந்த அனுபவத்தைத் தரும். அப்படிப்பட்ட ஒரு சிறந்த ஸ்பீக்கர் சிஸ்டத்தைத் தரவிருக்கிறது ஜெனிலேக் நிறுவனம். அதுவும் இந்த புதிய ஸ்பீக்கர் சிஸ்டம் குறைந்த விலைக்கு கிடைக்கும்.

இந்த புதிய ஸ்பீக்கர் சிஸ்டத்தின் பெயர் 6000எ டியூப் ஆகும். மேலும் இது குறைந்த அளவே தயாரிக்கப்பட உள்ளதால் விரைவில் வருபவருக்குத்தான் இந்த ஸ்பீக்கர் சிஸ்டம் கிடைக்கும். சிறந்த தரத்துடன் வரும் 6000எ டியூப் பல போர்ட்களை கொண்டுள்ளது. அதாவது இதில் இரண்டு 10வார்டஸ் ஆம்ப்ளிபையர்கள் உள்ளன. இதன் மூலம் டிவி மற்றும் மற்ற மியூசிக் டிவைஸ்களில் இதனை இணைக்க முடியும். மேலும் இதில் 3.5எம்எம் ஜாக்கும் உள்ளது.

பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஜெனிலிக்கின் 6000எ டியூப் மற்ற நிறுவனங்களின் சிறந்த ஸ்பிக்கர் சிஸ்டங்களுக்குப் போட்டியாக இருக்கும் என நம்பலாம். மேலும் இதை கணனி மற்றும் டிவிக்களிலும் இணைக்க முடிவதால் இதில் இசை கேட்பது சிறந்த அனுபவத்தைத் தரும்.

6000எ டியூப் ரிமோட் கன்ட்ரோல் வசதியும் கொண்டிருக்கிறது. இதன் ரிமோட் கன்ட்ரோல் மிகவும் சிறியது ஆனால் திறனோ மிகப் பெரியது. மேலும் இந்த ஸ்பீக்கர் ஆட்டோமேட்டிக் சிக்னல் சென்சிங் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. அதனால் 10 நிமிடத்திற்கு பிறகு இது தானாகவே ஸ்டான்ட் பை மோடிற்கு சென்றுவிடும்.

இந்த ஸ்பீக்கர்களில் சிறிய துல்லியமான இசையைக் கூட நாம் உணர முடியும். இதன் எடை 905 கிராமாகும். மேலும் இது சவுண்ட் டிபுயூசன் தொழில் நுட்பத்தைக் கொணடிருப்பதால் அறையின் மூலை முடுக்கெல்லாம் ஒரே இசை வெள்ளமாக இருக்கும். இந்த ஸ்பீக்கர்களை ஜெனிலிக்கின் ஆன்லைன் மூலமே வாங்க முடியும். குறிப்பாக இப்போது 1000 ஸ்பீக்கர்கள் ஜப்பானில் அறிமுகமாகியிருக்கிறது. இன்னும் 1000 ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதன் விலை ரூ.20,000 ஆகும். ஆனால் இதன் இசை வெள்ளம் நம்மை கிறங்கடித்துவிடும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X