Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ட்ரையாங்கிள்-எப்எக்ஸ் கூட்டணியில் புதிய ஸ்பீக்கர்கள்!

Updated: Saturday, July 28, 2012, 15:37 [IST]

french high end loudspeaker maker triangle forays into indian market

அட்டகாசமான ஸ்பீக்கர்களைக் களமிறக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ட்ரையாங்கிள் நிறுவனம் டெல்லியைச் சேர்ந்த எப்எக்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் ஒரு புதிய வர்த்தக  ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் இனி ட்ராயங்கிள் நிறுவனத்தின் ஸ்பீக்கர்களை விநியோகிக்கும் உரிமையை எப்எக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது.

மேலும் எப்எக்ஸ், ட்ரையாங்கில் நிறுவனத்திலிருந்து ஸ்பீக்கர்களை இறக்குமதி செய்து அதை இந்தியாவில் விற்பனை செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது. ட்ரையாங்கிள் ஸ்பீக்கரில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் அவற்றை ட்ரையாங்கிள் சரி செய்து தரும்.

இந்த புதிய வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ட்ரையாங்கிள் மற்றும் எப்எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் பல புதிய ஸ்பீக்கர்களை களமிறக்க இருக்கின்றன. இவற்றின் தொடக்க நிலை ஸ்பீக்கர்கள் ரூ.62,600 முதல் ரூ.1,22,500 வரை இருக்கும். அதுபோல் ட்ரையாங்கிளின் பிரீமியம் மெகல்லன் வரிசை ஸ்பீக்கர்கள் ரூ.8,51,000 முதல் ரூ.44,00,000 வரை இருக்கும்.

இந்திய எங்களது மிக முக்கிய சந்தையாக இருக்கிறது என்று ட்ரையாங்கிளின் இயக்குனர் அவுரேலி கொன்சாலோ கூறியிருக்கிறார். மேலும் தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனை செய்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதிக விலையில் வரும் இந்த ஸ்பீக்கர்கள் இந்தியாவில் போனியாகுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published:  Saturday, July 28, 2012, 15:37 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll