வீடியோ கேமிற்கான புதிய ஹெட்செட்: டெக்மோஷன் அறிமுகம்

By Super
|
வீடியோ கேமிற்கான புதிய ஹெட்செட்: டெக்மோஷன் அறிமுகம்
1980களில் கனிணிகளில் அதிக அளவில் வீடியோ கேம் வசதிகள் கிடையாது. ஆனால் புதிய தொழில் நுட்பம் அந்த நிலையை மாற்றியுள்ளது. அதுபோல் இந்த வீடியோ கேம்கள் விளையாட்டுப் பிரியர்களுக்கு மிக வரப்பிரசாதமாக உள்ளன. அதற்காக நாம் இன்டர்நெட்டுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ப்ளே ஸ்டோஷன் மற்றும் எக்ஸ்பாக்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த வீடியோ கேம் துறையில் கொடிகட்டிப் பறக்கின்றன. அவற்றோடு சேர்ந்து வேறு நிறுவனங்களும் இப்போது இந்த துறையில் களம் இறங்குகின்றன. அந்த வரிசையில் டெக்என்மோசன் நிறுவனமும் புதிய கேமிங் ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

டெக்என்மோசன் இப்போது புதிய யாப்ஸ்டர் ப்ளாஸ்டர் ஹெட்செட்டை வீடியோ கேம் பிரியர்களுக்காகவே வடிவமைத்திருக்கிறது. இந்த டிவைஸை கனிணிகள் அல்லது எக்ஸ்பாக்ஸ் 360 ஆகியவற்றோடு எளிதாக இணைக்க முடியும். இந்த டிவைஸ் கேம்கள் மட்டுமல்ல விஒஐபி கால்கள் மற்றும் ஆடியோ புக்குகள், போட்காஸ்டுகள் மற்றும் இசை கேட்பதற்கும் இதைப் பயன்படுத்தலாம்.

இந்த புதிய டிவைஸ் ரூ.1500க்குள் இருக்கிறது. யாப்ஸ்டர் ப்ளாஸ்டர் தெளிவான மற்றும் க்ரிஸ்பி ஒலியை வழங்குகிறது. ஏனெனில் இது நியோடிமியும் 40எம்எம் பேஸ் ட்ரைவர்களும் மற்றும் எக்ஸ்ஜாக்கர் சோனிக் ரஷ் ஆம்ப்ளிகேசன் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது.

இந்த டிவஸ் பார்ப்பதற்கும் மிக சூப்பராகவும் உள்ளது.

இந்த டெக்என்மோசன் ஹெட்செட்டுகள் மிகவும் அடக்கமாக உள்ளனய இதில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நாம் கேம் விளையாடலாம். அதனால் இந்த ஹெட் செட்டுகள் நமது காதுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தாது.

இந்த டெக்என்மோசன் ஹெட்செட்டுகள் மூலம் பூட்ஸ்டெப்ஸ், வெப்பன்ஸ் பையரிங் போன்ற ஒலிகள் கேம் விளையாடும் போது மிக அருமையாக கேட்கும். அதுபோல் இதே ஒலி அளவை உரையாடல்களின் போதும் நாம் கேட்க முடியும்.

இந்த டெக்என்மோசன் ஹெட்செட்டுகளின் உள்ள ஒரு சிறு குறைபாடு என்னவென்றால் அதன் ஓவர் சென்சிட்டிவிட்டி மைக்ரோபோனாகும். ஏனெனில் ஒரு சில சமயங்களில் தேவையில்லா ஒலிகளையும் தரும். இந்த டிவைஸை எக்ஸ்பாக்ஸ் 306ன் ஆடியோ அவுட்புட்டோடு இணைத்தால் போதும் இது இயங்க ஆரம்பித்துவிடும்.

ஆனால் எச்டிஎம்ஐ கேபிள் வைத்திருப்பவர்கள் இதை எக்ஸ்பாக்ஸ் 360ல் நேரடியாக இணைக்க முடியாது. மேலும் இதை நமது டிவியின் ஹெட்போன் ஜாக்கிலும் இணைக்க முடியும். பொதுவாகபா பார்த்தால் இந்த ஹெட்செட்டில் பெரிய குறைபாடுகள் ஒன்றும் இல்லை. இதன் விலை ரூ.1500 ஆகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X