சூப்பர்டூத் டிஸ்கோவின் போர்ட்டபுள் ஸ்பீக்கர் சிஸ்டம்

By Super
|
சூப்பர்டூத் டிஸ்கோவின் போர்ட்டபுள் ஸ்பீக்கர் சிஸ்டம்
ஸ்பீக்கர்கள் நமக்கு சிறந்த பொழுதுபோக்கை அளிக்கின்றன. குறிப்பாக முதலில் வந்த சோனியின் வாக்மேன் பின் அதற்கு பிறகு வந்த பிடிஎக்கள், டேப்லட்டுகள் மற்றும் லேப்டாப்புகள் ஆகியவை நமக்கு இசையை வழங்கின் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. ஆனால் இப்போது வரும் போர்ட்டபுள் ஸ்பீக்கர்கள் அதையும் தாண்டி அதிரடியான இசையை வழங்குகின்றன.

தற்போது சூப்பர்டூத் டிஸ்கோ ஒரு போர்ட்டபுள் ப்ளூடூத் ஸ்பீக்கர் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சிஸ்டத்தை இதன் ஆடியோ அவுட் ஜாக் அல்லது ஹெட்போன் ஜாக் மூலம் ஐபோன், ஐபேட் மற்றும் வாக்மேன் போன்றவற்றில் மிக எளிதாக இணைக்க முடியும்.

மேலும் இதை வாக்மேன் முதல் எம்பி3 ப்ளேயர், டேப்லட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வரை இணைக்க முடியும். அதன் மூலம் இது மிகவும் தெளிவான இசையை வழங்கும். இந்த டிவைஸைப் பற்றிய விமர்சனங்கள் மிகவும் சாதகமாகவே வருகின்றன. இந்த சாதனத்தின் எடை 1140 கிராம்களாகும் அதாவது சற்று எடை அதிகமான ஒன்றாகும். அதுபோல் இதன் நீளம் ஒரு அடியாகும். ஆனால் இது வழங்கும் இசை இதன் எடையைப் பற்றியக் குறையை நிவர்த்தி செய்து விடும்.

இந்த ஸ்பீக்கர் சிஸ்டத்தில் நமது விருப்பத்திற்கு ஏற்ப பேஸ் இசையை கூட்டவோ குறைக்கவோ முடியும். இதிலிருந்து வரும் பேஸ் இசை உண்மையாகவே நமது உள்ளங்களைக் கொள்ளையடித்துவிடும். இதை நமது டேப்லட் அல்லது ஸ்மார்ட் போன்களில் எதிர்பார்க்க முடியாது.

அதுபோல் ராக் இசையை இதில் அதன் ஒரிஜினாலிட்டி மாறாமல் அப்படியே கேட்கலாம். நமது ஐபோனில் இந்த ஸ்பீக்கரை இணைத்துவிட்டால் ஐபோனில் படம் பார்ப்பது கூட தியேட்டரில் படம் பார்த்த அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் இதன் ஒலி அளவை அதிகரித்தாலும் இரைச்சல் இருக்காது.

சூப்பர்டூத் டிஸ்கோ போர்ட்டபுள் மேசை ஸ்பீக்கரை இயக்குவதற்காக பட்டன்கள் உள்ளன. அதன் மூலம் இதன் ஒலி அளவை கூட்டவே குறைக்கவோ முடியும். அதுபோல் இந்த சிஸ்டத்தை ஆன் அல்லது ஆப் செய்ய முடியும். அதே நேரத்தில் பின் நோக்கிச் செல்ல முடியும். மேலும் இதை பாஸ் மோடில் வைக்க முடியும்.

சூப்பர்டூத் டிஸ்கோ போர்ட்டபுள் மேசை ஸ்பீக்கருக்கு பல வகைகளில் மின் திறனை கொடுக்க முடியும். அதாவது இதிலுள்ள அடாப்டர் மூலம் நேரடியாக மின் இணைப்பில் பொருத்த முடியும். அல்லது இதன் ரீஜார்ஜபிள் பேட்டரி மூலமும் இதற்கு மின்திறன் கிடைக்கிறது. இந்த ஸ்பீக்கரின் ஒலி அளவைப் பொருத்து இந்த பேட்டரி 10 மணி நேரம் வரை தாங்கும் சக்தியைக் கொண்டது.

இந்த ஸ்பீக்கர் சிஸ்டத்தின் விலை ரூ.5,750 ஆகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X