இந்தியாவில் அதிரடியான விலைக்குறைப்பில் ஐபோன் 5எஸ் : சலுகையா.? சூழ்ச்சியா.?

விலைக்குறைப்பு என்றதும் ஓடிப்போய் ஆர்ட்ர் செய்து விடக்கூடாது. ஏன்.? எதற்கு.? என்று முதலில் யோசிக்க வேண்டும்.!

|

இந்தியாவில் ஐபோன் 5எஸ் கைபேசிகளுக்கான ஆன்லைன் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதன் நம்பகத்தன்மையை விரிவுபடுத்தும் நோக்கத்தின் கீழ் ஆப்பிள் நிறுவனம் அதன் கருவிகளின் விலைகளை குறைக்க சமீப காலமாக திட்டமிட்டு வந்தது.

இந்நிலையில் ஐபோன் 5எஸ் விலை நிர்ணயத்தில் ஒரு கூர்மையான குறைப்பை நிகழ்த்தியுள்ளது. இது நிஜமாகவே ஒரு அற்புதமான சலுகையா அல்லது வியாபாரத் தந்திரம் நிறைந்த சூழ்ச்சியா.? என்பது தான் நமக்குள் எழும் ஒரே கேள்வியாகும்.!

ரூ.15,000/-க்கு

ரூ.15,000/-க்கு

தற்போது ரூ.18,000/-க்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 5எஸ் கருவியை விரைவில் ரூ.15,000/-க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பிரத்யேக ஆன்லைன் சந்தை மூலோபாயத்தின் ஒரு பகுதி என்று கூறப்படும் இந்த சலுகையில் கீழ் ஐபோன் கருவிகள் இந்தியாவின் இடைப்பட்ட ஸ்மார்ட்போன் சந்தைப் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் ஆப்பிளின் நோக்கம் தெரிய வருகிறது.

அதே தந்திரத்தை

அதே தந்திரத்தை

அதுமட்டுமின்றி சாம்சங், மோட்டோரோலா, லெனோவா, ஓப்போ மற்றும் ஆசஸ் போன்ற போட்டியாளர்கள் அவர்களின் ஆண்ட்ராய்டு கருவிகளை வெளியிட்டு மிட்-ரேன்ஜ் பிரிவில் இந்திய சந்தையில் ஒரு பெரிய பங்கைப் ஆட்கொண்டுள்ள காரணதல் ஆப்பிள் நிறுவனமும் அதே தந்திரத்தை பின்பற்றவுள்ளது.

ஐஓஎஸ் பதிப்பான ஐபோன் 5எஸ்

ஐஓஎஸ் பதிப்பான ஐபோன் 5எஸ்

அதனை தொடர்ந்தே, பல சிறந்த முதன்மை அம்சங்கள் மற்றும் ஒரு நல்ல கேமரா மற்றும் வலுவான பேட்டரி காப்பு கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஐஓஎஸ் பதிப்பான ஐபோன் 5எஸ் கருவி மீது ரூ.3000/- விலைக்குறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

யோசிக்க வேண்டிய கட்டாயம்

யோசிக்க வேண்டிய கட்டாயம்

"இந்தியாவில் ஒரு ஆக்கிரமிப்பு விலையில் ஒரு ஐபோன் மாதிரியை ஆப்பிள் பெற விரும்பிவதுடன், நிறுவனம் சான்றளிக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட மாடல்களையும் களமிறக்க திட்டமிட்டுள்ளது" என்று ஆப்பிள் அறிக்கைகள் கூறினாலும் பிற நாட்டு சந்தைகளில் வேலைக்கு ஆகாத கருவிகளை விலைக்குறைத்து இதர நாடுகளில் விற்பனை செய்யும் வியாபாரத் தந்திரத்தையும் நாம் இங்கு யோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

10-12% விலை குறைப்பு

10-12% விலை குறைப்பு

அடுத்த மாதம் இந்தியாவில் ஆப்பிள் அதன் நேரடி தயாரிப்பு ஆலைகளை தொடங்குகிறது. அதற்கு பின்னர் ஐபோன் எஸ்ஐ கருவிகளுக்கு 10-12% விலை குறைப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற சலுகைகள் சற்று நியாயமானதாக தெரிகிறது.

ஜாக்கிரதை

ஜாக்கிரதை

ஏனெனில் இந்தியாவிலேயே உற்பத்தி தொடங்கினாள் ஷிப்பிங் செலவு மிச்சம், வரிச்சலுகைகள் மிச்சம் என கருவிகளின் விலை நிர்ணயம் தானாகவே குறையும். ஆனால் காரணமே இல்லாத திடீர் விலைக்குறைப்புகள் ஆர்வத்தை விட சந்தேகத்தையும் நம்பகமில்லாத்தன்மையையுமே அதிகம் கிளப்புகிறது, ஜாக்கிரதை.!

Best Mobiles in India

English summary
You may soon get an iPhone 5S for Rs 15,000. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X